ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடைபெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் வெளிவந்த தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துவரும் விடாமுயற்சி திரைப்படத்திலும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை.
ஆக்ஷன் கிங் அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்தை யானை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த சொல்லிவிடவா திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது திருமண நிச்சயதார்த்தம் இன்று அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை ஐஸ்வர்யா அர்ஜுன் கரம் பிடிக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அதாகப்பட்டது மகாஜனங்களே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக கலைஞரின் உமாபதி ராமையா தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் மற்றும் தண்ணி வண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் உமாபதி ராமையா போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி முதல் நான்கு இடங்களில் இடம் பிடித்தார். இந்த சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா இடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது. அங்கிருந்து தொடங்கிய இவர்களது காதல் பயணத்திற்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி இருப்பதால் தற்போது இந்த பயணம் திருமணத்தை நோக்கி நகர்கிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா அர்ஜுன் உமாபதி இராமையா காதல் ஜோடியின் அழகிய நிச்சயதார்த்தம் இன்று அக்டோபர் 27ஆம் தேதி சென்னையில் நடைபெற்றுள்ளது சென்னையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் காட்டியிருக்கும் கோவிலில் நெருங்கிய நட்பு வட்டாரம் மற்றும் இரு வீட்டார் உறவினர்களோடு இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்று இருப்பதாக தெரிகிறது. விரைவில் இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோ இதோ…