தமிழ்நாடு புதுச்சேரி கேரளா அசாம் மேற்கு வங்காளம் என 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் மே 2-ம் நாளான நேற்று 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கிறது. முதல் முறையாக திரு மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
" சமூகநீதி கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ , திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"
என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்ட திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
" இசைப்புயல் ஆஸ்கார் விருதாளரான தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தமிழக மக்களின் சார்பில் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயல்படும்"
என தன்னுடைய பதிலில் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியான 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. கேரளாவில் மாபெரும் வெற்றிபெற்ற பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார ் இந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் பினராயி விஜயனின் இந்த வெற்றி 40 ஆண்டுகால கேரள அரசியலில் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அசாமில் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) May 3, 2021
இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும். https://t.co/m0urghBjVr
— M.K.Stalin (@mkstalin) May 3, 2021