தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த கூட்டணி ராஜ் –கோடி. இதில் ராஜ் என்ற சோமராஜூ திடீர் மராடைப்பு காரணாமாக உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் திரையுலகில் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

90 களில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் ராஜ் – கோடி கூட்டணி. பிரபல இசையமைப்பாளர்களான தோட்ட குரு சொமராஜூ மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் ஆகியோர் தெலுங்கு திரையுலகில் 90 களின் காலக் கட்டத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து இந்த கூட்டணி தெலுங்கு திரையுலகில் முன்னணியில் வலம் வந்தவர்கள்.

ராஜ் – கோடி கூட்டணியில் இதுவரை 180 க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகியுள்ளது. அதில் பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. 3000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். இந்த 3000 பாடல்களில் 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் சின்ன குயில் சித்ரா பாடியுள்ளனர்.இசையமைப்பாளர் ராஜ் ஏ ஆர் ரஹ்மான் அவருடன் எட்டு ஆண்டுகள் கீபோர்டு புரோகிராமராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இசையமைப்பாளர் ராஜ் கடந்த 1994 ல் 'ஹலோ பிரதர்' என்ற படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

66 வயதாகும் இசையமைப்பாளர் ராஜ் குளியலறையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. விழுந்த ராஜ் சுய நினைவில் இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக கூட்டி சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ராஜ் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ராஜ் அவர்களின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களையும் ராஜ் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இழப்பு குறித்து ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “80 களில் உங்கள் ராஜ் – கோடி கூட்டணியில் வேலை பார்த்த அழகான நினைவுகளை மறக்க முடியாது “ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் ஏ ஆர் ரஹ்மான் பதிவின் கீழ் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.