உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.



கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த இக்கட்டான நிலையில் FEFSI தொழிலாளர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி திருத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.



இந்த கோரிக்கையை ஏற்று பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்போது நடிகர் இசையமைப்பாளர் அனிருத் இரண்டு லட்ச ரூபாயும்,நடிகர் அருள்நிதி 200 முட்டை அரிசியும் அளித்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

. . Music director @anirudhofficial donated ₹ 2 lakhs @arulnithitamil donated 200 bags of 25 kg Rice to #FEFSI#CoronaVirusChallenge#CoronavirusLockdown #21daysLockdown #21daysLockdownIndia @V4umedia_ pic.twitter.com/2P04YVL5vB

— RIAZ K AHMED (@RIAZtheboss) March 27, 2020