தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அமலா பால்.மைனா படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் அமலா பால்.இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் அமலாபால்.தமிழ்,தெலுங்கு,மலையா
கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்திவிட்டார் அமலா பால்.இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அதோ அந்த பறவை போல,காடவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களின் ரிலீஸ் கொரோனவால் தள்ளிப்போயுள்ளது.
அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாப்பாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுதந்துள்ளது. நேர்த்தியான, தரமான கதைகள், கனமான கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் கொண்டாடும் கதாப்பாத்திரங்களை தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் கன்னடத்தில் “யூ டர்ன்” ( U Turn) படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே ( Kudi yedamaithe ) வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது. இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இது மற்ற திரைப்படங்கள், தொடர்கள் போல வழக்கமான ஹீரோ ஹீரோயின் கதாப்பாத்திரங்கள் அல்ல. இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது. இது தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் Netflix ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
தற்போது அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் “கடாவர்” (cadaver) படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த படங்கள், தொடர்கள் தவிர அமலாபால் Jio Studios & Vishesh Films நிறுவன தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
.@Amala_ams to headline #KudiYedamaithe an fantasy thriller made as an 8 episode Web-Series.
— Done Channel (@DoneChannel1) December 22, 2020
Directed by U-Turn fame @pawanfilms. @DoneChannel1 pic.twitter.com/UyY0Uq5pL8