தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அமலாபால் அடுத்ததாக நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக மலையாளத்தில் தயாராகி வரும் ஆடுஜீவிதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அமலாபால் நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் அதோ அந்த பறவை போல திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில், முன்னதாக அமலாபால் நடித்துள்ள கடாவர் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
கடாவர் திரைப்படத்தை அமலாபால் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அமலாபால் தயாரித்து நடித்துள்ளார். இயக்குனர் அனூப்.S.பணிக்கர் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கடாவர் திரைப்படத்தில் அமலா பாலுடன் இணைந்து ஹரிஷ் உத்தமன், ரித்விகா பன்னீர்செல்வம், ரஞ்சின் ராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கடாவர் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான கடாவர் திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கடாவர் திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது. அந்த ஸ்னீக் பீக் வீடியோ இதோ…