தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு படத்தில் நடித்து வருகிறார் அஜித்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

துணிவு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் ராஜதந்திரம் வீரா,சமுத்திரக்கனி,பிக்பாஸ் அமீர்,பவானி ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.மஞ்சு வாரியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படம் 2023 பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என்றும் , சில்லா சில்லா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் , பாடல் வரிகளை காக்கா கதை ஆல்பம் பாடல் புகழ் வைசாக் எழுதியுள்ளார் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

#ChillaChilla recorded our Rockstar @anirudhofficial 🫶🏼 in the lyrics of @VaisaghOfficial

Hashtag 🙌🏻 👉🏼 #ThunivuUpdate #Ajithkumar #HVinoth #NoGutsNoGlory @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan pic.twitter.com/lgwsZ9rpwp

— Ghibran (@GhibranOfficial) November 4, 2022