தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட மாபெரும் மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. முன்னதாக சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் முத்திரை பதித்த இயக்குனர் H.வினோத் தனது மூன்றாவது திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் உடன் கைகோர்த்தார். அந்த வகையில் அஜித்குமார் H.வினோத் கூட்டணியில் முதல் படமாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறை இணைந்த இக்கூட்டணியில் வெளிவந்த வலிமை திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த வெற்றி பயணத்தில் மூன்றாவது முறையாக தொடர்ந்து இணைந்த அஜித் குமார் - H.வினோத் கூட்டணியில் அடுத்து தயாரான திரைப்படம் தான் துணிவு. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீசான துணிவு திரைப்படம் பக்கா அதிரடி ஆக்சன் படமாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக தயாராகும், AK62 திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் அஜித்குமார் உடன் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையும் AK62 திரைப்படத்திற்கு வேதாளம் மற்றும் விவேகம் ஆக்கிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் AK62 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே AK62 படத்திற்கு அஜித் குமாரின் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து தற்போது அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது இதுகுறித்து அஜித்குமார் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்திற்கு பிறகு திரு.அஜித் குமார் துவங்க இருக்கும் இரண்டாவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்திற்கு பரஸ்பரம் மரியாதை பயணம் என பெயரிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். தனது உலக பைக் சுற்று பயணத்திற்கு பரஸ்பர மரியாதை பயணம் என அஜித் குமார் பெயரிட்டுள்ளது தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது அந்த பதிவு இதோ…