தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் மிகவிரைவில் தொடங்கவுள்ளது.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அஜித் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்த ஷாலினியை காதலித்து மார்ச் 24ஆம் தேதி 2000-ஆவது ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு வீட்டை கவனித்து வருகிறார் ஷாலினி.பலருக்கும் எடுத்துக்காட்டாக இந்த ஸ்டார் ஜோடி வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு ஆத்விக்,அனுஷ்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது திருமண நாள் நெருங்கி வரும் வேளையில் ஷாலினியின் தங்கையும் நடிகையுமான ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து 23 ஆன்டுகள் திருமண வாழக்கையில் அடியெடுத்து வைக்கும் இவர்களுக்கு ஷாமிலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.