தல அஜித்தின் ரசிகர்கள் படக்குழுவிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து பல்வேறு விதங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதை படத்திற்கு சம்பந்தமே இல்லாத பிரபலங்களிடம் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். முன்பு வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு இருந்ததும் இணையத்தில் படு வைரலானது.
சென்னையில் நடந்து வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்க்க அஜித் ரசிகர்கள் சென்றிருந்தார்கள். அங்கு இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடம் வலிமை அப்டேட் கேட்டனர் தல ரசிகர்கள். அந்த வீடியோ இணையத்தில் பெரியளவில் வைரலானது.
கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை பார்த்து அலி பாய்.. அலி பாய் என ரசிகர் கூப்பிட அவர் திரும்பி பார்த்தவுடன் வலிமை அப்டேட் என ரசிகர் கேட்டிருந்தனர். அது புரியாததால் அவர் திரும்பிக்கொண்ட நிகழ்வு அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பிரதமர் மோடியிடம் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர் தல ரசிகர்கள். பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் கேரள மாநிலம் புறப்பட்டார்.
தனது வாகனத்தில் பாதுகாவலர்களுடன் வந்துகொண்டிருந்தது மோடியிடம், தல அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை காமித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த போனி கபூர் வலிமை ஷூட்டிங் பிப்ரவரி 15-ம் தேதி நிறைவு பெரும் என்றும், வெளிநாட்டில் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் இன்ட்ரோ பாடல் குறித்த தகவலை தெரிவித்தார். விக்னேஷ் சிவன் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
This is Pure Crazeeeeeee 🔥
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 15, 2021
Finally Fans asking #ValimaiUpdate To Honourable PM @narendramodi when he Visited Chennai Yesterday 😊
The Most Wanted News and Talk of the Town is THALA AJITHs VALIMAI Movie Update's
Hope it strikes Us Very Soon 🤗#Valimai pic.twitter.com/U7o9WpvIzN