இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர்.

தமிழில் வெளியான ஈஸ்வரன் மற்றும் பூமி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை நிதி அகர்வால் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.மேலும் தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கமான FEFSI-ல் பணியாற்றும் தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் FEFSI-க்கும் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.

முன்னதாக தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் நிதி உதவி செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சியான் விக்ரம், நடிகர் அஜித்குமார், நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி குடும்பம், பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குநர் ஏஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் பங்களிப்பாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்தனர்.

இந்த மோசமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு சினிமா பிரபலங்கள் முன்வந்துள்ள நிலையில் அண்ணன் இளம் கதாநாயகிகள் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நிதி அகர்வாலின் இந்த நிதி உதவி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Actress @aishu_dil today contributed a sum of Rs 1 lakh to the Tamil Nadu Chief Minister's Relief Fund to help the state government combat the crisis caused by #CoronaSecondWave. She also donated a sum of Rs 1 lakh to the #FEFSI union@mkstalin @CMOTamilnadu @Udhaystalin pic.twitter.com/fIBb1Faq2G

— Yuvraaj (@proyuvraaj) May 19, 2021

Kudos Actress @AgerwalNidhhi have donated Rs 1,00,000/- Lakh to @CMOTamilnadu ‘s Chief Minister Public Relief Fund 👍 @mkstalin @Udhaystalin @arivalayam 👍 #NidhhiAgerwal #CovidRelieffund pic.twitter.com/fgOC0MjMhn

— Yuvraaj (@proyuvraaj) May 18, 2021