தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் நீண்ட காத்திருப்பிற்கு பின் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸாக தயாராகி வருகின்றன.
இதனிடையே அடுத்ததாக தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகும் மாணிக் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் சாம்ரட் சக்கரபோர்ட்டி இயக்கத்தில் செவிலியர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மாணிக் திரைப்படத்தை எண்டோமால் சைன் இந்தியா மற்றும் நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்திரநாத் மாணிக் ஒளிப்பதிவு செய்யும் மாணிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக வடக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மாணிக் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படபிடிப்பு தளத்தில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் இதோ…
Super thrilled and honoured to be a part of the Tamil-Hindi bi-lingual#Manik, Directed by #SamratChakraborty sir, Looking forward to this one! @NutmegProd @EndemolShineIND @tvaroon #Abhishekramisetty #PruthvirajGK @narentnb @GB_1904 #LiyaVerghese @gobeatroute @proyuvraaj pic.twitter.com/MDczoiP3nz
— aishwarya rajesh (@aishu_dil) November 3, 2022