தனது விடாமுயற்சியாலும் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலமும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து அசத்தி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.
ஹீரோயினாக மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு வெயிட்டான படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இவரது திட்டம் இரண்டு படம் சில நாட்களுக்கு முன் சோனி லைவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.இவர் நடிப்பில் அடுத்த்தாக துருவ நட்சத்திரம்,பூமிகா,டிரைவர் ஜமுனா,மோகன்தாஸ்,Tuck Jagadish மற்றும் சில படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா.இவரது 25ஆவது படமான பூமிகா படம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் Stone Bench தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை ரத்தின்திரன் பிரசாத் இயக்கியுள்ளார்.ப்ரித்வி சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.விது,சூர்யா கணபதி,மாதுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது