தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்தி அட்டகாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களின் அடுத்த திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இஸ்லாமிய பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடிக்க இவருடன் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், கிட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய கவனம் பெற்றது. இந்நிலையில் வரும் மே 12 தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ஃபர்ஹானா திரைப்படம் குறித்தும் திரைப்பயணம் குறித்தும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் அவரது அப்பா குறித்து பேசிய போது,

“எங்க அப்பா 36 வயசு இருக்கும் போது இறந்துட்டாரு. கனா படம் அவர் பார்த்திருந்தா பெருமை பட்டிருப்பார். ஆனால் அவர் இருந்திருந்தா சினிமாவில் நடிக்க விட்ருப்பாரானே தெரியாது.. 3 பையனுக்கு அப்பறம் பிறந்த பெண் நான் அதனால் என் மேல் கொஞ்சம் possessive அ இருப்பார். இருந்திருந்தார் படங்கள் பார்த்து நிச்சயமா சந்தோஷப்பட்டிருப்பார்.

அப்பறம் என் அண்ணன்கள் இரண்டு பேர் இப்ப இல்ல.. நிறைய வாட்டி அவங்கள பத்தி பேசிருப்போம். இரண்டாவது அண்ணா, மானாட மயிலாடா பயிற்சி 10 மணி ஆனாலே சண்டை போடுவான் ஏன் இவ்வளோ லேட் னு...படங்கள் பார்த்து நிஜமாவே பெருமை பட்டிருப்பாங்க.. நான் நடிச்ச க.பெ.ரண சிங்கம், ஃபர்ஹானா, கனா, தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை...ஆனால் வடசென்னை பார்த்தா மட்டும் கொஞ்சம் டென்ஷன் ஆயிருப்பாங்க னு நினைக்கிறேன்..அதுவும் வித்யாசமான படம்தான்.. தமிழ் சினிமாவில் பத்மா கதாபாத்திரம் போல் வந்ததே இல்லை.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசிட்டு , அந்த வார்த்தைகளெல்லாம் சரியா பேசிட்டேன் னு நினைக்கிறேன்.. இன்னிக்கு வரைக்கும் அந்த கதாபாத்திரம் பேசப்பட்டிருக்கு.. சமீபத்தில் கூட ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு டிரெண்ட் ஆச்சு.. " என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..