தமிழ் சினிமாவில் மக்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்து தற்போது தமிழ் திரையுலகின் நம்பிக்கையான நடிகராக நிற்கும் நடிகர் சசிக்குமார். நடிகராகவும் இயக்குனராகவும் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பின் நடிகராக பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அதன்படி சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நாடோடிகள்’, ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டி புலி’, ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘உடன்பிறப்பே’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இயக்குனர் ஆர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் பெற்று தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது சசிக்குமார் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘நானா’, ‘நந்தன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் நீண்ட காலம் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கும் பின் சசிகுமாரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பைவ் ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் இயக்குனர் ஆர்டிஎம் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார். மேலும் இவருடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிக்கவுள்ளார்.
இயக்குனர் ஆர் டி எம் முன்னதாக காவல் துறை உங்கள் நண்பன் என்ற படத்தை இயக்கியுள்ளார்..கொரோனா தோற்று ஊரங்கிற்கு பின் வெளியான இப்படம் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வெற்றியை பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான ருத்ரன் திரைப்படத்தை தொடர்ந்து பைவ் ஸ்டார் கிரியேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘PRODUCTION 11’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுவாகவே சசிகுமார் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று படத்தை கொண்டு வந்து விடுவார் சமீபத்தில் ஏற்பட்ட சறுக்களை அயோத்தி திரைப்படம் சரி செய்து அவர் மீண்டும் அட்டகாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வருவதாக தகவல். அதன்படி இயக்குனர் ஆர்டிஎம் இயக்கும் இப்படமும் புது உணர்வினை ரசிகருக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.