தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் பெயர்களாக பல சினிமா, சின்னத்திரை, யூடியூப் மற்றும் மாடலிங் பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
குறிப்பாக விஜய் டிவியின் பிரியங்கா தேஷ்பாண்டே, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு,ஷாலு ஷம்மு, பிரபல மாடல் மில்லா, கௌசல்யா, பிரியா ராமன், பவானி ரெட்டி, சந்தோஷ் பிரதாப், இமான் அண்ணாச்சி, சூசன் ஜார்ஜ், டிக் டாக் பிரபலம் GP முத்து, செய்தி வாசிப்பாளர் கண்மணி உள்ளிட்டோரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் நிலையில், நடிகை சூசன் ஜார்ஜ் பிக் பாஸ் குறித்த தனது முடிவை தெரிவித்துள்ளார்.
மைனா, ராட்சசன் படங்களில் நடித்த, நடிகை சூசன் ஜார்ஜ் கட்டாயமாக பிக்பாஸில் கலந்து கொள்வார் என பேசப்பட்டு வந்த நிலையில், நடிகை சூசன் ஜார்ஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் இல்லை” என தனது பதிலை மிகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே வருகிற அக்டோபர் 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக போட்டியாளர்களின் பெயர்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— suzane George (@gsuzane) September 30, 2021