தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியிலும் ‘தி ஃபேமிலி மேன்’ தொடரில் நடித்து இந்திய சினிமாவில் மிகப் பிரபலமானார் சமந்தா. இதனிடையே தனிப்பட்ட வாழ்கையில் சில பிரச்சனைகளை சந்தித்த சமந்தா பின் உடல்நலனிலும் பாதிக்கப்பட்டார். 'மயோசிடிஸ்' என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதற்கான சிகிச்சையில் முழுதாக ஈடுபட்டார். இதனால் சமந்தா நடிப்பில் வெளியாகவிருந்த திரைப்படங்கள் நடிக்கவிருந்த திரைப்படங்கள் நிழுவையில் இருந்தது.
இருந்தும் சிகிச்சையின் போதே சமந்தா நடித்து முடித்த ‘யசோதா’ திரைப்படத்தின் டப்பிங் வேலையை முடித்து கொடுத்தார். அதன்படி கடந்த ஆண்டு யசோதா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மகாகவி காளிதாசர் எழுதிய அபிஞான சாகுந்தலம் என்ற சமஸ்கிருத நாடகத்தை அடிப்படையாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் பிப்ரவரி 17 ல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிவா நிர்வாண இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வுடன் இணைந்து சமந்தா நடித்து வந்துள்ள திரைப்படம் ‘குஷி’. இப்படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் நின்றது. பின் படத்தை மீண்டும் தொடர முடியாமல் சமந்தா உடல் நலமும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டரில் “குஷி திரைப்படம் எப்போது?” என்று கேட்க அதற்கு சமந்தா அதற்கு சமந்தா “குஷி திரைப்படம் விரைவில் துவங்கப்படவுள்ளது. விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு என் மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது சமந்தாவின் பதிவு. இதனைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா சமந்தாவின் பதிலை பகிர்ந்து அதனுடன் “உங்கள் முழு ஆரோக்கியத்துடனும் புன்னகையுடனும் படம் தொடங்க நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில் இருவரது பதிவும் அதிகப்படியாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக படபிடிப்பு தளத்தில் சமந்தாவின் பிறந்தநாளை surprise ஆக கொண்டாடி படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ அன்று இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா உடல் நிலை மற்று தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் திரைப்பயணத்தில் அயராமல் ஓடிக் கொண்டிருக்கின்றார். அதன்படி சமந்தா தற்போது உலகின் மிகப்பெரிய வசூல் குவித்த ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படத்தின் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் சர்வதேச அளவிலான தொடர் ‘சிடாடல்’ தொடர் தற்போது இந்திய மொழி வடிவில் எடுக்கப்படவுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். மேலும் இத்தொடரை 2021 ல் இந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ தொடர் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரசிகர்கள் சமந்தாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.