தென்னிந்தியாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. தமிழில் வாலி படத்தில் அறிமுகமான இவர் பின் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யம், விக்ரம், சிம்பு, ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய முழுவதும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். எதார்த்தமான நடிப்பிற்கு இன்றும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். பின் 2006 ல் நடிகர் சூர்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கே தனி ரசிகர் கூட்டம் காலம் காலமாக இருந்து வருகின்றது. திருமணம் முடிந்து திரைத்துறையில் நடிக்காமல் விலகி இருந்த ஜோதிகா பின் தனது கணவரும் நடிகருமான சூர்யாவுடன் இணைந்து பட தயாரிப்பில் இறங்கினார். அதன்மூலம் 2D தயாரிப்பு நிறுவனம் என்ற தொடங்கப்பட்ட தயாரிப்பில் கடந்த 2015 ல் ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்
நீண்ட இடைவெளிக்கு பின் திரைத்துறையில் மீண்டும் வருகை தந்தாலும் ரசிகர்கள் அவருக்கு அதே வரவேற்பை கொடுத்து வரவேற்றனர். பின் தொடர்ந்து காற்றின் மொழி, தம்பி, ஜாக்பாட், நாச்சியார், உடன் பிறப்பே போன்ற படங்களில் நடித்து வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் வெற்றி ஓட்டத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகா அவர்கள் மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் ‘காதல் தி கோர்’ படத்திலும் இந்தியில் ராஜ்குமார் ராவ் படமான ‘ஸ்ரீ’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்ட்கிராம் பக்க்கத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் தலைகீழ் நின்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்து அதனுடன் “MOM turned upside down spells WOW” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து தனது ரசிகர்கள் அந்த வீடியோவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்ட்கிராமில் வருகை தந்த ஜோதிகா தனது அன்றாட வாழ்வில் சிறப்பு நிகழ்வுகளை அவ்வப்போது பதிவிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.