தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஷால் இயக்கி நடிக்கவுள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் SJ.சூர்யா ஜாக்கி பாண்டியன் எனும் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி. விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள, லத்தி திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர தயாராகி வரும் லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 22ம் தேதி கிறிஸ்மஸ் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற டிசம்பர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.