தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விமல். தமிழ் சிநிமாவிற்கு வருகை தந்த போதே ‘பசங்க, ‘களவானி’, ‘வாகை சூடவா’ போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து கவனம் பெற்றார் விமல். அதன் பின் பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் நடிகர் விமல். எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த விமல் கடைசியாக நடித்த எந்த படமும் பெரிதளவு அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன்படி இடையே ஏற்பட்ட இடைவெளிக்கு பின் நடிகர் விமல் நடித்த இணைய தொடர் ‘விலங்கு அட்டகாசமான திரில்லர் கதைகளத்தில் கடந்த ஆண்டு ஜீ5 தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் நடிகர் விமல் வெற்றியுடன் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கினார். மேலும் நடிகர் விமல் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் விமல் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தற்போது ‘மா.பொ.சி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறேன். அதன் பின் மைக்கேல் இயக்குனர் எடுக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறேன். அதன் பின் ‘கலகலப்பு’, ‘தேசிங்கு ராஜா’ வரிசையிலான காமெடி படத்தில் நடித்து வருகிறேன். மேலும் விலங்கு தொடரின் இரண்டாவது சீசன் துவங்கவிருக்கிறது.

தற்போது நடித்து வரும் மா.பொ.சி திரைப்படம் 80 களில் நடக்கும் கதை. வித்யாசமான தோற்றத்தில் விதவிதமான காஸ்டியூம், ஹேர்ஸ்டைல் இப்படத்தில் இருக்கும் அனைவரும்ரசிக்கும்படி இருக்கும். அதன்பின் இயக்குநர் மைக்கேல் இயக்கும் படத்தில் முதன்முறையாக சென்னை வட்டார வழக்கை பேசி நடித்திருக்கிறேன். மேலும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இந்திய நாட்டுக்கு கிடைத்த பெருமை. என்னைப் பற்றி பரவும் வதந்திகளை முருகன் பார்த்துக்கொள்வார்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நடிகர் விமல் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வெற்றி தொடரான விலங்கு தொடரின் இரண்டாவது சீசனுக்கான அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.