தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூரி தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2பாகங்களாக தயாராகியுள்ள விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் பேசிய நடிகர் சூரி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “சீம ராஜா, சாமி² ஆகிய படங்களில் நீங்கள் நடித்த போது உங்களை நிறைய திட்டினார்கள்… அப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள் என்றால் "வீடியோ கேமரா இருந்தால் விமர்சனம் பண்ணலாம்னு நினைக்கிறாங்க?" என மிக கோவமாக சொன்னீர்கள் அப்போது அந்த கோபம் ஏன்? எனக் கேட்டபோது,

“எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.. ஒருவேளை நான் சொல்லியிருந்தாலும் சும்மா ஏதோ ஒன்று என சொல்லி இருக்க மாட்டேன். அதில் முன்பின் என்ன நடந்தது என்று தெரிந்திருந்தால் நான் சரியாக சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். வெற்றி தோல்வி என்பது சகஜம் தானே.. நாம் சிந்திப்பது எல்லாமே எல்லார் பார்வைக்கும் சரியாகவே போயிருக்கும்... நான் சிந்திப்பது உங்களுக்கும் பிடிக்கும் என எல்லா இடத்திலும் நான் ஜெயிக்க முடியாது அல்லவா.. எங்கேயாவது ஓரிடத்தில் என்னுடைய சிந்தனை உங்களுக்கு தவறாக இருக்கலாம் என்னுடைய செயல் உங்களுக்கு தவறாக இருக்கலாம். ஒரு காமெடியன் என்ன செய்கிறான் என்றால், அவன் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து அந்த ஷூட்டிங் நிறைவடையும் வரை அவன் ஸ்கோர் பண்ண வேண்டும். ஒரு படத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சொன்னதை சரியாக செய்து விட வேண்டும் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என இருக்கும். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். எல்லா கதாபாத்திரங்களும் அப்படித்தான் நினைப்பார்கள் ஆனால் காமெடியன்கள் மட்டும் தான் நம்முடைய ஆளுமை இருக்க வேண்டும், நாம் பெரிதாக தெரிய வேண்டும் பெரிதாக கைத்தட்ட வேண்டும் என நினைப்பது காமெடியன்கள்தான் அப்போது நான் மெனக்கெடுவதற்கு தயாராக இருக்கிறேன்.. ஆனால் சில நேரங்களில் எனக்கு அதற்கான இடம் கிடைக்காது. அப்போது அந்த இடத்தில் விவாதித்து அதை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஒருவேளை நான் நினைத்துக் கொள்வேன், நாம் விவாதிக்க வேண்டாம் எல்லோருடைய பார்வையும் நம் மீது விழவேண்டாம் நான் சொல்லிப் பார்ப்பேன் ஒரு காமெடியை உங்ககளிடம் சொல்லுவேன் உங்களது முகத்தில் தெரிந்துவிடும் இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை வேண்டாம், அடுத்து போகலாம் என்ன சொல்கிறீர்களா என்று.. அந்த நேரத்தை நான் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். ஒரு சிறிய விஷயம் சார் எவ்வளவு பேருக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை... இயக்குனர்களை விட ஒளிப்பதிவாளர்களை விட காமெடியன்-க்கு கொஞ்சம் அனுபவம் ஜாஸ்தியாகவே இருக்கும் என நினைக்கிறேன். இவர்கள் ஒரு ஐந்து படம் பண்ணுகிறார்கள். இவன் ஒரு 150 படம் செய்துவிட்டு வந்து விடுவான். அப்படி 150 படம் பண்ணும் போது எந்த நேரத்தில் இயக்குனர் சொல்லும் போது இல்லை வேண்டாம் இந்த பன்ச்சை நான் தான் போடுவேன்... இதை புரிந்து கொள்ளுங்கள் சார் நன்றாக இருக்கிறது. என சில இயக்குனர்களிடம் மிக அன்பாக சொல்வேன். கொஞ்சம் சண்டை போட்டு வற்புறுத்தி கூட ஒரு காமெடியன் அந்த பன்ச்சை போட்டிருப்பான். அந்தப் பன்ச் நிறைய இடங்களில் கைத்தட்டல்களை வாங்கி இருக்கும்… நிறைய இடங்களில் தோற்றிருக்கும். அப்போது, ச்சே.. இயக்குனர் சொன்னதை கேட்காமல் நாம் அந்த விஷயம் வேண்டும் என இப்படி தவறு பண்ணி விட்டோமே.. அவர் சொன்ன மாதிரி இருந்திருக்கலாமே இது மாதிரியும் பண்ணி இருப்பேன். பல நேரங்களில் பிடிவாதம் செய்து நான் போட்ட பன்ச்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.. அதே இயக்குனர் எனக்கு போன் செய்து சூரி நல்லவேளை நான் வேண்டாம் என சொல்லி இருந்தேன் என பேசி இருப்பார். அந்த மாதிரி காமெடியனுக்கு ஒரு சின்ன அனுபவம் ஓரளவுக்கு தெரியும். மொத்தமாக சொல்ல முடியாது. அப்படி இருக்கும்போது சில விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்கும் நாம் ஒன்று பண்ணி இருப்போம் சில இடங்களில் நாம் எதிர்பார்த்த மாதிரி பண்ணவும் முடியாது அவர்களுடைய திட்டங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு பண்ண வேண்டும். அந்த தருணத்தில் இப்படி செய்வது தவறி இருக்கலாம். அது என்னுடைய தவறு கிடையாது நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஒரு படம் வெளியான பின்பு அது நன்றாக இல்லை என்றால் மொத்தமாக நன்றாக இல்லை என்று சொல்வார்கள் ஆனால் காமெடி நன்றாக இல்லை என்றால், “அதை ஏன் கேட்கிறீர்கள் கொன்று விட்டான்” என சொல்வார்கள். அது மட்டும்.. முழு பொறுப்பும் அவனை நோக்கி தான் வரும். எனவே சில நேரங்களில் நான் நினைப்பதை செய்ய முடியாது அதை நாம் சொல்லவும் முடியாது எனவே ஏற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி வரும் போது நீங்கள் சொன்னது போல ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா? அந்த ஒரு இதில் நான் சொன்னது போல் தான் நீங்கள் பார்க்காமல் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறீர்கள். ஒரு காமெடியன் பின்னால் இருந்து பாருங்கள் அவன் எவ்வளவு மெனக்கெடுக்கிறான் என்று .. அப்படி ஒரு மனநிலையில் நான் அந்த பதிலை சொல்லி இருக்கலாம்.” என பதில் அளித்துள்ளார் சூரியின் அந்த முழு பேட்டி இதோ…