தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தான் மாவீரன். மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வித்தியாசமான பேண்டஸி திரைப்படமாக அழுத்தமான கதைக்களத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஊடகத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் எமோஷனலாக சில விஷயங்களை பேசினார். அப்படி பேசுகையில், "உங்கள் எல்லோருக்குமே தெரியும், 'டெலிவிஷனில் மிமிக்ரி பண்ணி ஆரம்பிச்ச ஒருத்தன்' அதனால் எல்லா நடிகர்களின் பாதிப்பும் எனக்கு இருக்கும். அது வேறு வழி கிடையாது அதற்கு முன்பு ஒரு 2000 - 3000 மேடைகளில் நான் மிமிக்ரி மட்டும்தான் செய்து கொண்டு இருந்தேன். அந்த மிமிக்ரி மட்டும்தான் எனக்கு வாய்ப்பு தேடி கொடுத்தது. அந்த மிமிக்ரி தான் எனக்கு விசிட்டிங் கார்டு. எனக்கு டிவியில் வருவதே ஒரு கஷ்டமான விஷயம். அப்படி டிவியில் வந்த பிறகு சினிமாவில் வருவது அதைவிட ரொம்ப கஷ்டமான விஷயம் நான் சினிமாவில் வந்த பிறகு காமெடி தான் என்னுடைய அடையாளமாகவே இருந்தது. அதனால் காமெடி மட்டுமே செய்து கொண்டு தான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன். அப்படி சினிமாவில் என்னதான் செய்யப் போகிறேன் என்றே தெரியாது. தொடர்ந்து ஒவ்வொரு படமாக செய்து செய்து வரும் பொழுது... எப்போதுமே படம் நன்றாக இருக்கிறது ஜாலியாக இருக்கிறது காமெடியாக இருக்கிறது என்டர்டெய்னர் என்பதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதும் சொல்கிறேன் சிறந்த நடிகராக இருப்பதைவிட சிறந்த என்டர்டெய்னராக இருப்பதற்கு தான் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை. ஏனென்றால் சிறந்த என்டர்டெய்னர் என்பதை மக்கள் ஒரு சிலருக்கு தான் கொடுப்பார்கள். அப்படி ஒரு விஷயத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள் அதை இன்னும் சீரியஸாக எடுத்துக் கொண்டு மெனக்கிட வேண்டும் என நினைக்கிறேன். வெறும் என்டர்டெய்னராக மட்டும் இருந்துட்டு போனால் நாம் கற்றுக் கொள்வது மிகவும் குறைந்துவிடும் என்ற பயம் எனக்கு எப்போதுமே உண்டு. வெறும் என்டர்டெய்னராக மட்டும் இருந்துட்டு போனால் நாம் கற்றுக் கொள்வது மிகவும் குறைந்துவிடும் என்ற பயம் எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால் அதை நான் மட்டுமே ஒன்றுமே பண்ண முடியாது. நல்ல இயக்குனர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நல்ல நடிகர்களாக மாற்றலாம். எனக்கு அப்படி மடோன் அஸ்வின் கிடைத்திருக்கிறார்." என்று மிகவும் எமோஷனலாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.