இந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கும் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. மஹா திரைப்படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாக நடிக்கும் மஹா திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் மஹா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் U.R.ஜமீல் எழுதி இயக்கியுள்ள மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளரான R.மதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்கிறார். நேற்று மஹா திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது.
வருகிற ஜூலை 2-ஆம் தேதி மாலை 6 மணியளவில் மஹா திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில் மஹா திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை உரிமமத்தை ஸ்டார் மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மஹா திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
So Happy To Share That Audio Rights Acquired By @starmusicindia#maha #hansika50th
— Mathiyalagan V (@MathiyalaganV9) June 30, 2021
@malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter @ghibranofficial @MathiyalaganV9 @Act_Srikanth@DoneChannel1@murukku_meesaya@starmusicindia @dir_URJameel pic.twitter.com/7koipdsz0J