தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜெயம் ரவி தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். அதை தொடர்ந்து பல பிளாக் பஸ்டர் படங்களை நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ஜெயம் ரவி. அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமாக அமைந்தது இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன். இப்படத்தின் கதையில் பொன்னியின் செல்வனாக வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருப்பார். முதல் பாதியில் ஜெயம் ரவியின் நடிப்பு அனைத்து ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் ஜெயம் ரவி அவர்களின் நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டு தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“ஆர்த்திக்கு சீசேரியன் தான் பண்ணாங்க.. என்னையும் உள்ள கூப்டாங்க.. 3.2.1 சொன்னதும் மயங்கிட்டாங்க எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு.. திரும்பி பார்த்தா மார்க் லாம் பண்ணிட்டு இருக்காங்க.." என்றார் ஜெயம் ரவி தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி: "அந்த நேரத்துல நான் அப்படி ஆனதும் அவரும் மயங்கி விழுந்துட்டாராம். அவருக்கு எதே ஆப்ரேஷன் பன்றா மாதிரி படுத்துட்டு இருந்துருக்காரு.. எங்க மாமியார் வந்து அவர அடிச்சு எழுப்பி விட்ருக்காங்க.." என்றார். தொடர்ந்து ஜெயம் ரவி, "எங்க அம்மா அடிக்குற கேப்ல வந்துட்டான்‌. ரெண்டாவது குழந்தை அயான். சத்தம் கேட்டு போய் பார்த்தேன்.. அது வேற ஒரு புனிதமான தொடர்பு..முதல் பையன் பிறந்தப்போ நான் பாரிஸ் ல இருந்தேன்‌. எங்க அப்பா போன் ல என்ன நடக்குது னு சொன்னார். குழந்தை பிறந்துடுச்சுடா னு சொன்னதும் நான் என்ன குழந்தை னு கேட்கல..‌ ஆர்த்தி எப்படி இருக்கு னு தான் கேட்டேன்." என்றார்.

மேலும் ஜெயம் ரவி அவர்கள் தனது குடும்பத்தொரோடு கலந்து கொண்டு தனது திரைப்பயணம் மற்றும் வாழ்கை குறித்த பல சுவாரஸ்யமான தருணங்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..