தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகரான நடிகர் ஜெய் சென்னை 600028, சுப்பிரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் எனும் நிக்கா, பலூன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் வெப் சீரிஸிலும் நடித்துள்ள நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ட்ரிபிள்ஸ் வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, குற்றமே குற்றம் மற்றும் பட்டாம்பூச்சி என ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
அடுத்ததாக மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடிகர் ஜெய் புதிய திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் முன்னதாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்த வீரபாண்டியபுரம் வருகிற பிப்ரவரி 18-ம் தேதி ரிலீசாக உள்ளது.
LENDI ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.ஐஸ்வர்யா தயாரித்துள்ள வீரபாண்டியபுரம் திரைப்படத்தில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், காளி வெங்கட், ஹரிஷ் உத்தமன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக சிவசிவா என பெயரிடப்பட்டு இருந்த இத்திரைப்படம் சமீபத்தில் வீரபாண்டியபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டியபுரம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் ஜெய் இசையமைப்பாளராகவும் களமிறங்குகிறார். நடிகர் ஜெய்யின் 30-வது திரைப்படமாக ரிலீசாக இருக்கும் வீரபாண்டியபுரம் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் வீரபாண்டியபுரம் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Our Intense Family entertainer #Veerapandiyapuram starring @Actor_Jai Certified U/A Releasing on Feb 18th Worldwide in theaters..#AJaiMusical@Dir_Susi @meenakshigovin2 @LendiStudios @aishwaryas24 @VelrajR @mukasivishwa @ajay250193 @saregamasouth @DoneChannel1 pic.twitter.com/MCfAvFzr5g
— Lendi Studios (@LendiStudios) February 7, 2022