மலையாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாந்தம் என்ற படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கியவர் ஐ.எம்.விஜயன், விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஸ்ரியா ரெட்டியின் அண்ணனாக நடித்திருந்தார். மலையாளத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட இவர் வறுமையின் காரணமாக ஆரம்பத்தில் திருச்சூர் முனிசிபாலிட்டி மைதானத்தில் சோடா விற்று வந்தார். சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் மீது வந்தார். ஆர்வம் கொண்டிருந்த விஜயன், பின்னர் கேரள டிஜிபி மூலமாக கேரளா காவல்துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் தனது 17 வயதில் இணைந்தார். விஜயன் மிக ஆக்ரோஷமான Forward ஆட்டக்காரர் ஆவார். மேலும், சர்வதேச அளவில் 12 நொடிகளில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்ற விஜயன், இந்திய கால்பந்தாட்ட அணியின் Player of the year என்ற பட்டத்தை பெற்ற முதல் வீரராகவும் உள்ளார்.
கேரள காவல்துறை கால்பந்தாட்ட அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயன் பல்வேறு போட்டிகளில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். 2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார். இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய விஜயன், 29 கோல்களை அடித்துள்ளார். கால்பந்தாட்ட விளையாட்டில் ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரத்தை ( அப்பா விஜய்) கத்தியால் குத்திக் கொல்லும் வில்லனாக நடித்திருந்தார். அலெக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் விஜயன் கேரள காவல் துறையின் அசிஸ்டண்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு திரை ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா, கால்பந்து, கடமை என அசத்தி வரும் ஐ.எம்.விஜயன் அவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.
I am glad to inform you all that I have been promoted as Assistant Commandant of Kerala Police. pic.twitter.com/aRN8ZsrtUB
— I M Vijayan (@IMVijayan1) February 20, 2021