தமிழ் சினிமாவில் நடிகர் நடிகையர் திருமணம் செய்து கொள்வதை ரசிகர்கள் அதிகம் கவனித்து வருவார்கள். அந்த காலம் தொடங்கி இன்றைய நவீன யுகம் வரை நட்சத்திரங்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் தனி அக்கறையை கொண்டிருப்பார்கள். திருமணம் அறிவிப்பு முதல் திருமணத்திற்கு பின் அவர்களின் வாழ்கையின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் வைத்திருப்பார்கள்.
அதன்படி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் அன்பையும் கவனத்தையும் ஈர்த்த காதல் ஜோடி நட்சத்திரம் அஜித் – ஷாலினி. அமராவதி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் ஒரு காலத்தில் காதல் மன்னனாக திரையுலகை கலக்கி வந்தார். அதன்படி வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அஜித் குமாரை சாக்லேட் பாயாக மட்டுமே பார்த்த கூட்டமும் இருந்தது. அதே நேரத்தில் 1997 காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்த காதலுக்கு மரியாதை மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு கொடுத்தது. துரு துரு நடிப்பு மக்களிடையே அதிகம் பேச வைத்தது. அதன்பின் வெகு சில படங்களிலே தமிழ் மலையாளம் மொழிகளில் நடித்தார். ஆனால் அவர் நடித்த எல்லா திரைப்படங்களும் மெகா ஹிட். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ இன்றும் காதலர்களுக்கு பிடித்த திரைப்படமாக அமைந்து வருகிறது. இவர் நடிகர் அஜித் உடன் ‘அமர்களம்’ என்ற படத்தில் நடித்தார். ஆக்ஷன் கதைக்களம் கொண்டிருந்தாலும் அட்டகாசமான காதல் டிராக் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது.
அஜித் ஷாலினி ஜோடி மக்களிடம் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் ஷாலினி – அஜித் இருவரும் காதலித்து 2000 ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். பின் ஷாலினி திரைப்படங்களில் ஏதும் நடிக்காமல் ஒய்வு எடுக்க தற்போது இந்த தம்பதியினருக்கு மகள் மற்றும் மகன் ஒருவர் இருக்கிறார். அஜித் ஷாலினி இருவரும் சமூக ஊடங்கங்களில் இல்லாமல் இருந்தாலும் இவர்களின் காதல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. சமீபத்தில் நடிகை ஷாலினி சமூக வலைதளத்தில் வருகை தந்தார். அதில் ஷாலினி அவர் கணவரும் நடிகருமான அஜித் குமாருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு டிரெண்ட் ஆகும்.
அதன்படி தற்போது ஷாலினி அஜித் உடன் உல்லாசமாக படகில் ஜோடியாக நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனையடுத்து புகைப்படம் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.