ஒவ்வொரு சீசனை போலவும் இந்தமுறையும் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5.18 போட்டியாளர்களோடு பிரமாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் Eviction & 3 வைலட்கார்ட் எனட்ரிகளுக்கு பிறகு தற்போது 11 போட்டியாளர்களுடன் தொடர்கிறது.
இந்த வாரத்திற்கான எவிக்சனுக்கான நாமினேஷன் ப்ராஸஸில் 11 போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டனர். போட்டியாளர்கள் தங்களை நாமினேஷனிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அடுக்கடுக்கான பல டாஸ்க்குகளை பிக்பாஸ் தொடர்ந்து நடத்தி வருகிறது.இந்த டாஸ்க்குகளின் இறுதியில் தற்போது சிபி,நிரூப் மற்றும் தாமரைச்செல்வி மூவரும் நாமினேஷனிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டனர்.
இதனையடுத்து மற்ற 8 போட்டியாளர்களும் கடைசியாக நடைபெறும் டாஸ்க்கில் இந்த நாமினேஷனிலிருந்து யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்ற புதிய ப்ரோமோ இன்று (டிசம்பர் 17) வெளியானது.இந்நிலையில் பிக்பாஸில் இந்த வாரத்திற்கான எவிக்சனுக்கு ராஜு, அக்ஷரா, பாவனி, வருண் மற்றும் பிரியங்கா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிலிருந்து நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு முதலாவதாக காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் அபிநய் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அபிநய் Evict ஆகிறார்.