தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த சில வருடங்களாக அரசியலில் செம பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.இதனை தொடர்ந்து கண்ணை நம்பாதே,மாமன்னன்,கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

தயாரிப்பாளராக பல தரமான படைப்புக்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் பல வெற்றிப்படங்களின் அங்கமாக இருந்து வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டு 15ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் சமீபத்தில் தங்களுடன் பணியாற்றிய பலரையும் கௌரவித்து சிறப்பித்தனர் ரெட் ஜெயண்ட் குழுவினர்.

திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 15ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் ஒரு ஸ்பெஷல் வீடீயோவை வெளியிட்டுளளனர்.தங்களுக்கு இத்தனை வருடங்களாக ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்,தொடர்ந்து பல தரமான படைப்புக்களை அடுத்தடுத்து தந்து மக்களை எண்டெர்டைன் செய்ய ரெடியாக உள்ளனர்.

Celebrating 15 years of unforgettable movies and entertaining you. We thank everyone for being a part of our journey! pic.twitter.com/GEGCchzoHr

— Red Giant Movies (@RedGiantMovies_) August 2, 2022