தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.இவர் ஹீரோவாக நடித்திருந்த 100% காதல் படம் திரைக்கு வரவுள்ளது.
தெலுங்கில் ரிலீசாகி சூப்பர்ஹிட் அடித்த 100% லவ் படத்தின் ரீமேக் தான் இந்த படம்.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.நாசர்,தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.எம்.எம்.சந்திரமௌலி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.சூர்யா வெளியிட்ட இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.