சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் தயாராகி இன்று OTTயில் வெளியாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று.2D என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.OTT தளத்தில் வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இந்த படம் என்பதை பார்க்கலாம்
குறைந்த கட்டணத்தில் மக்களை பறக்க வைக்க வேண்டும் என்ற விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை கதையான Simply Fly என்ற புத்தகத்தை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத பைலட் ஆஃபீசர் நெடுமாறன் ராஜாங்கம்,தன்னை போல கஷ்டப்படும் பலருக்கும் உதவும் படி குறைந்த கட்டணத்தில் இயங்கும் விமான சேவை நிறுவனம் ஒன்றை தொடங்க ஆசைப்படுகிறார்.இந்த வழியில் அவர் சந்திக்கும் சிக்கல்கள்,துரோகம் என அனைத்தையும் கடந்து எப்படி ஜெயித்தார் என்பதை சொல்கிறது சூரரைப் போற்று.
சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்னும் கதாபாத்திரத்துக்கு முற்றிலும் பொருந்திப்போகிறார்.கோபம்,ஏக்
கருணாஸ்,காளி வெங்கட்,ஊர்வசி,விவேக் பிரசன்னா,கிருஷ்ணகுமார்,பூ ராமு என்று படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் கனகச்சிதமாக பொருந்திப்போகின்றனர்.மோகன்பாபு சில காட்சிகளே வந்தாலும் தனது நடிப்பால் நம் நெஞ்சங்களில் இடம்பிடிக்கிறார்.
இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் மிக தைரியமாக இந்த படத்தை எடுத்ததற்கு சுதா கொங்காராவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.படத்தி
இவர்களை தவிர படத்தின் இருபெரும் தூண்களாக விளங்கியவர்கள் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் படத்திற்கு வசனம் எழுதிய உறியடி பட இயக்குனர் விஜயகுமார்.விஜயகுமாரின் கூரான வசனங்களோடு ஜீ.வி.பிரகாஷின் மிரட்டலான இசையும் படத்திற்கு மிகப்பெரும் பக்கபலமாக உள்ளன.
டெக்னிக்கலாக இந்த படம் மிக ஸ்டராங்கான படமாக அமைகிறது.பிரம்மாண்ட காட்சிகளோ,எளிமையான காட்சிகளோ நிக்கெத் பொம்மியின் ஒளிப்பதிவு,ஆர்ட் டைரக்ஷன்,எடிட்டிங் என்று அனைத்து துறைகளும் கனகச்சிதமாக படத்திற்கு தேவையான பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு எப்படி மெய்யானது அதிலிருக்கும் கஷ்டங்கள் என்னென்ன அவன் எப்படி வெற்றிகொண்டான் என்ற இந்த கதையை தேர்வுசெய்து மக்களிடம் இவ்வளவு சிறப்பாக எடுத்துரைத்தற்கு சூர்யா,சுதா கொங்காரா மற்றும் மொத்த படக்குழுவினர் பெரிய பாராட்டுக்கள்.
Verdict
அனைவரும் மிஸ் செய்யமால் பார்க்கவேண்டிய சாமானியனின் சாதனை பயணம்