நம்ம தமிழ் மண்ணோட பாரம்பரிய வரலாறு பொன்னியின் செல்வன் புத்தகமா வெளியாகி பெரிய வரவேற்பை வாங்குச்சு.கிட்டதட்ட 40 வருஷமா இந்த வரலாற்றை படமா எடுக்கணும்னு பலரும் முயற்சி பண்ணி பல காரணங்களால அது நடக்காமலே போய்கிட்டு இருந்துச்சு.இந்த வரலாறை பற்றி தெரிஞ்சுக்காத பலரும் இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னு பல வருஷ போராட்டத்துக்கு பிறகு இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மணி ரத்னம்.
நம்ம வரலாறை பத்தி புக் படிச்சு தெரிஞ்சுக்கிட்டவங்களும், தெரியாத வரலாறை தெரிஞ்சுக்கணும் அப்படி ஏன் இந்த சரித்திரம் இவ்ளோ பேசப்படுதுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தவர்களும் காத்திக்கிட்டு இருந்த அந்த நாள் இன்னைக்கு வந்துருக்கு.மணி ரத்னம் இயக்கத்துல பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக தயாராகியிருக்கு , அதோட முதல் பாகம் இன்னைக்கு திரையரங்குகள்ல பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியிருக்கு.இந்த படம் ரசிகர்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சதா இல்லையா , படத்தோட பிளஸ் மைனஸ் என்ன அப்டிங்கிறதை நம்ம இப்போ பார்க்கலாம்
படத்தோட கதை முக்கால்வாசி பேருக்கு தெரிஞ்சது தான்னாலும் முதல் பாகம் எதை பத்தி அப்ப்டிங்கிறத சொல்றோம்.தஞ்சாவூரை ஆண்டுக்கிட்டு வர்ற சுந்தர சோழன் நோயால் அவதிப்பட , அடுத்த அரசன் யாருன்னு சலசலப்பு ஏற்படுது.அதோட வானத்துல வர்ற வால் நட்சத்திரம் ஒண்ணு சோழ பரம்பரையில் ஒருத்தர் இறந்துருவாருன்னு சொல்ல , சுந்தர சோழனோட மகன்களை அடுத்த மன்னனாக ஆகவிடாமால் , சுந்தர சோழனோட பெரியப்பா மகனை அரசனாக்க சதி வேலைகள் நடக்குது.இந்த சதியை யார் பண்றது எதுக்காக , சுந்தர சோழனோட பசங்க தஞ்சை வந்தங்களா அப்படிங்கிறது படத்தோட மீதிக்கதை.
படத்தோட நாயகர்களா வர்ற சியான் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி எல்லாருமே தங்களோட நடிப்பாற்றலை சரியா பயன்படுத்தி சூப்பரா நடிச்சிருக்காங்க.ஆதித்த கரிகாலனா சியான் விக்ரம் , ஆக்ரோஷமான இளவரசனா நடிச்சு தன்னோட முத்திரையை பதிக்கிறார்.
அருண்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வனா நடிச்சு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திருக்காரு ஜெயம் ரவி.சண்டை காட்சிகள்ல அசத்துறது , சாதுர்யமான பேச்சால மிரட்றதுன்னு பல இடங்கள்ல ஸ்கோர் பண்ணிருக்காரு.
வந்தியத்தேவனாக வர்ற கார்த்தி தன்னோட இயல்பான நடிப்பால கலக்கியிருக்காரு.ரொமான்ஸ்,நடனம்,காமெடி,ஆக்ஷன்ன்னு எல்லாத்துலயும் சிறப்பாக செஞ்சு கதையை முன்னெடுத்து கொண்டுபோறதே இவரோட கதாபாத்திரம் தான்.தன்னோட ஆல் இன் ஆல் நடிப்பால் நம்மை அசர வைக்கிறார்.படத்தோட ஆணிவேரா கார்த்தி இருக்காரு,பல இடங்கள்ல படத்தை தாங்கி பிடிச்சுருக்காரு.
குந்தவையாக நம்ம மனசை கொள்ளையடிக்கிற த்ரிஷா.துடிப்பான அழகாலயும்,துடிப்பான நடிப்பாலயும் நம்மளை ரசிக்க வைக்கிறாங்க.ஐஸ்வர்யா ராய்யோட வர்ற சீன் தியேட்டர்ல ரசிகர்கள் விசில் அடிச்சு கொண்டாடுனாங்க.
நந்தினியா வர்ற ஐஸ்வர்யா ராய் தன்னோட அழாகாலயும்,நடிப்பாலயும் நம்மளை கட்டிபோடுறாங்க.சாதுர்யமான வில்லியா நடிச்சு கதையோட விறுவிறுப்பு குறையாமல் இருக்க ஒரு முக்கிய காரணம்
முக்கிய கதாபாத்திரங்களை தாண்டி மனசுல நிக்கிற ஒரு கதாபாத்திரம் பூங்குழலி தான்.பூங்குழலியா வந்து நம்ம மனசை கொள்ளையடிச்சுட்டு போறாங்க ஐஸ்வர்யா லக்ஷ்மி.கம்மியான சீன் வந்தாலும் படத்துல தன்னோட முத்திரையை பதிக்கிறாங்க.
பெரிய பழுவேட்டரையர் ஆக நடிச்சுருக்க சரத்குமார் , சின்ன பழுவேட்டரையர் நடிச்சுருக்க பார்த்திபன்,சோபிதா தூளிபாலா,ஜெயராம்,பிரபு,விக்ரம் பிரபுன்னு ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் படத்துல இருக்காங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சரியா பண்ணியிருக்காங்க
இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இயக்குனர் மணி ரத்னம்.படத்துல நிறைய முக்கிய நடிகர்கள் இருந்தாலும் அவங்களை கையாண்ட விதம் ரொம்ப அருமையா இருக்கு.கல்கியோட பாணியையும்,தன்னோட பாணியையும் இணைச்சு ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை மணிரத்னம் கொடுத்திருக்காரு.முதல் பாதி ஸ்லோவா போறது படத்துக்கு கொஞ்சம் பின்னடைவாக அமையுது.இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் சில இடங்கள்ல படத்துக்கு வேகத்தடையா வர்றது போல சில காட்சிகள் அமைஞ்சுருக்கு.உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் , இந்த படத்துல மிச்ச படங்கள் மாதிரி மாஸ் மொமெண்ட்ஸ் பெருசா இல்லாதது ரசிகர்கள் கிட்ட லைட்டா ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு.கிளைமாக்ஸ் கப்பல் சண்டை காட்சி இன்னும் கொஞ்சம் Better-ஆ எடுத்திருக்கலாம்.
படத்துக்கு பக்கபலமா இருந்த முக்கியமான ஒருத்தர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்,படத்துக்கு ஏற்கனவே பாடல்கள் மூலமா முகவரி கொடுத்த ரஹ்மான்.பின்னணி இசையால் பல இடங்கள்ல படத்தை தாங்கி பிடிச்சுருக்காரு.ரஹ்மானை அடுத்து தன்னோட அழகான கேமரா மூலமா ரசிகர்களை சோழ தேசத்துக்கு அழைச்சுட்டு போன ரவிவர்மன் ஒரு மேஜிசியன் தான்.ஸ்ரீகர் பிரசாத் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செஞ்சுருக்காரு.புக் படிக்காத எல்லாருக்கும் படம் பிடிக்கும் , புக் படிச்சவங்களுக்கு வேறு சில மாற்றுக்கருத்துகளும் இருக்கலாம்.
மொத்தத்துல சில சறுக்கல்கள் இருந்தாலும் நம்ம ஊரு பெருமையை பிரம்மாண்டமாக பெரிய திரையில் ரசிச்சு பார்க்க ஒரு நல்ல அனுபவம் இதை மிஸ் பண்ணாம பாருங்க
Verdict
கண்டிப்பா பெரிய திரையில் பார்த்து கொண்டாட வேண்டிய படம் தான் பொன்னியின் செல்வன்