இரண்டரை ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் நடிகர் சூர்யாவின் படம். அயன் படத்தில் வரும் வசனம் போல் தியேட்டரே சும்மா நெருப்பு மாதிரி இருந்துச்சுனா. அன்பான ரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையில் அவதரித்தார் நம் நடிப்பின் நாயகன்.
மண்ணின் பெருமையையும், பெண்ணின் பெருமை கொண்டு கதைக்குள் என்ட்ரி ஆகின்றனர். பெண்களை இயற்கையோடு ஒப்பிடுவது, பெண் புகழ் விழா எடுப்பது, பெண் குழந்தை பிறந்தால் மரக்கன்று நடுவது என்று இறைவிகளை போற்றி பாடியே கதைக்குள் நுழைகின்றனர்.
கண்ணபிரான், கோசலை, ஆதினி என பாத்திரங்களுக்கு தமிழ் பெயர்கள் வைத்து அலங்கரித்துள்ளார் இயக்குனர்.
தியேட்டர் மொமண்ட்டை, செலிபிரேஷன் மொமண்ட்டாக மாற்றியது வாடா தம்பி பாடல்.
தமிழ் சினிமாவின் செல்லம்மாவாக திகழும் பிரியங்கா வரும் காட்சிகளுக்கு பிரியாவிடை தருகின்றனர் ரசிகர்கள்.
உள்ளம் உருகுதய்யா பாடலில் முருகன் வேடத்தில் வரும் சூர்யாவை காணும் போது திரை மார்கண்டேயர் சிவகுமார் அவர்களை பார்ப்பது போல் இருந்தது. அலட்டல் இல்லாத அளவான ரொமான்ஸ் காட்சிகள் க்யூட்டான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியது.
ஆளே இல்லாத ஊருல இலுப்பம்பூ தான் சக்கரையாம் இந்த மாதிரி வழக்கு வார்த்தைகள் கொண்டு வசனங்களை வர்ணிப்பது பாண்டிராஜின் டச் என்றே கூறலாம்.
அத்தெரி பச்சா தூக்கிடுடானு சொல்லும் அப்பா சத்யராஜ், இட்ஸ் ஓகே டா-னு சொல்லும் அம்மா சரண்யா பொன்வண்ணன் இவர்களெல்லாம் பார்க்கும் போது நம்ம வீட்லயும் இப்படி இருக்கமாட்டாங்களானு யோசிக்கத் தோணுது. நடிப்பில் அப்படி ஒரு எதார்த்தம். சீனியர் நடிகர்கள் அல்லவா...
விறுவிறுப்பாக செல்லும் முன்பாதியில் பொண்ண தூக்குற காட்சி கிளாப்ஸை அள்ளும் என்றே கூறலாம். இதுபோன்ற காட்சிகள் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஃபுல் மீல்ஸ்.
கிராமத்து கதைகள் நடிகர் சூரிக்கு ஹோம் கிரௌண்ட் என்றே கூறலாம். புகழ் உடன் சேர்ந்து சூரி செய்த ஒன்-லைனர்ஸ், கவுன்ட்டர்கள் குறைவாக இருந்தாலும், நிறைவாக இருந்தது என்றே கூறலாம். யாருடா இவன் சூரி கிட்டயே வந்து சூரி காமெடி பண்றான் என்கிற மீம்ஸை சோஷியல் மீடியாக்களில் கண்டாலும், சலிப்பு தட்டாத வகையில் இருந்தது.
எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, இளவரசு, ராமர், சிபி, சாய் தீனா போன்ற துணை நடிகர்கள் பெரும் துணையாக இருந்தனர்.
பெண் என்பவள் பொறுமைக்கு பூமியாய்,பொருளுக்கு.... கடலாய், கடமைக்கு நதியாய், அழகுக்கு நிலவாய், ஆடவருக்கு அரசியாய், சேய்க்கு தாயாய்...என பெண்மையை போற்றி பாடினாலும்...சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களின் தனியுரிமை
வைத்து விளையாடுவோர் பற்றி பேசுபவர்கள் குறைவே.
அதை ஆணிவேராக வைத்து கதையை வடிவமைத்துள்ளார் பாண்டிராஜ்.
இளம் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து, அவர்களை உடலளவிலும், மனதளவிலும் சித்திரவதை செய்யும் படுபாவிகளை கண்ணபிரான் எப்படி பந்தாடுகிறார் என்பதே கதைக்கரு.
பாதிக்கப்பட்டோருக்கு குடும்பத்தினர் தரும் ஆறுதலே அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதை காட்சியாய் எழுதிய இயக்குனரின் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்.
நிஜமே படம், படமே நிஜம்... இதுதான் சினிமா பிரபஞ்சம்.
படத்தின் கதைக்களம், நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டியது.
பெண்கள்னாலே பலவீனமானவர்கள் என்று எள்ளளவும் இனி யாரும் எண்ணக்கூடாது என்பதற்கு இப்படம் சிறந்த சான்று. ஆண் பிள்ளைகளை பெற்றெடுப்பதில் பெருமை இல்லை...பெண்மையை மதிக்கும் மனிதர்களை உருவாக்குவதே பெற்றோரின் கடமை.
#JusticeForபெண்னின்பெயர் என்று ஹாஷ்டேக் போராட்டம் இனி வேண்டாம். விழுத்திடுங்கல்
இரண்டாம் பாதியில் இடம்பெற்ற சும்மா சுர்ருன்னு பாடல் சும்மா அரங்கை அதிர வைத்தது.
பாடலாசிரியர் சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் கிளாப்ஸ்.
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சரியான வகையில் இருந்ததால் படத்தின் வேகத்தை சரியாக எடுத்துக்காட்டியது.
நம்பத்தகுந்த ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு சல்யூட்.
90ஸ் கிட்ஸுக்கு ஹீரோ வினய்-னா 2கே கிட்ஸுக்கு வில்லன் வினய். வரும் காட்சிகளில் மிரட்டியெடுக்கிறார். கூலாக தவறு செய்து, நாயகனை நடுங்க வைத்த வித்தைகள் சபாஷ்.
அன்பிற்கு பணிந்தவன் , எதற்கும் துணிந்தவன்.
தவறு நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணபிரான் காட்சியளிப்பார்.
உழைப்பால் அகரம் தந்தவர பாருயா, நடிப்பால் பல சிகரங்களை தொடுவாரு நம் சூர்யா !!!
எவ்வித அச்சமும் இன்றி, சமூகத்தில் நடக்கும் தவறை சரியாக சுட்டிக்காட்டி, இப்படிப்பட்ட படைப்பை ரசிகர்களுக்கு தந்த படக்குழுவினர் நிஜத்திலும் "எதற்கும் துணிந்தவர்களே"
Verdict
சூர்யாவின் பெர்ஃபார்மன்ஸும், படத்தின் முக்கிய உள்ளடக்கமும் படத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கிறது.