News தமிழ் Galatta Daily Photos Quiz Music

Tamil Movies Review


பீஸ்ட் திரை விமர்சனம் !
Release Date: 0000-00-00 Movie Run Time: Censor Certificate:

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும் வீரம் நிறைந்த வீரராகவனாக, ரா ஏஜென்ட்டாக வருகிறார் விஜய். பணியில் ஏற்படும் மனக்கசப்பின் காரணமாக நாயகன் திசை மாற, நாயகி பூஜா ஹெக்டே கண்ணில் சிக்குகிறார்.

அதன் பிறகு என்ன ? ஹலமத்தி ஹபிபோ தான். சென்னை ஈஸ்ட் கோஸ்ட் ஷாப்பிங் மால்-ஐ தீவிரவாதிகள் சிறை பிடிக்க, அவர்களுடன் உள்ளே மாட்டிக்கொள்கிறார் வீரராகவன்.

வழக்கமாக தீவிரவாதிகளின் கன்ட்ரோலில் ஓர் இடமோ, பொருளோ, உயிரோ இருந்தால்...அதை அரசாங்கத்தின் சார்பாக டீல் செய்ய திறன் கொண்ட காவல் அதிகாரி நிச்சயம் இருப்பார். அப்படிப்பட்ட அல்த்தாஃப் ஹுசைனாக வருகிறார் செல்வராகவன். இயக்கத்தின் ஜீனியஸாக திகழும் செல்வராகவன், நடிகராக தனது டெபுட் மேட்ச்சை விளையாடியுள்ளார். எதார்த்தமான செல்வராகவனின் நடிப்பு பல இடங்களில் பாராட்டும் வகையில் உள்ளது.

நெல்சன் யுனிவர்ஸில் கிளி, மாகாளி இல்லாமல் எப்படி ? விடிவி கணேஷ், சதீஷ், யோகிபாபு, ரெடின், வாட்ச்மேன் முனுசாமி ஆகியோரின் காமெடி கலாட்டா சில இடங்களில் சிரிப்பு வெடியாக இருக்கும்.

பொதுவாக ஷாப்பிங் மாலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் படத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சாமானியர்களின் கணக்கு சுற்று குறைவாகவே உள்ளது. அதுபோன்ற இடத்தில சற்று கூடுதல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை நிரப்பியிருக்கலாம்.

படம் துவங்கி இறுதி வரை தளபதியின் ஆக்ஷன் அதிரடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம்.

படத்தின் பாடல் வரி இயக்குனர் நெல்சனுக்கு அப்படி பொருந்தும். எப்பவும் லைஃப்-உ திரும்பலாம்
நம்புறியா நண்பா... ஃபேன்-பாய் மொமெண்ட் என்பது தாண்டி வேற மாரி... வேற மாரி... இன்னும் கூடுதலான தியேட்டர் மொமன்ட்ஸை கதையில் சேர்த்திருக்கலாமே சார் ?

யூகிக்க முடிந்த முதல் பாதி, இரண்டாம் பாதி, இடைவேளை,கிளைமாக்ஸ் காட்சிகள் என இருந்தாலும்..தளபதியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் விருந்து படைக்கிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் பாணியில் இந்த பீஸ்ட் இருக்குமா என்று கூறினால் நிச்சயம் இருக்காது. சற்று ஆக்ஷன் அதிரடி நிறைந்து காணப்படும்.

இரண்டாம் பாதியில் வரும் ஃபைட்டர் ஜெட் காட்சிகள் சற்று நம்பகத்தன்மைக்கு அப்பார்பட்டு இருந்தாலும், ஹாலிவுட் தரத்தில் இருந்தது என்றே கூறலாம்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கைவண்ணம் ஃபிரேம்-பை-ஃபிரேம் அற்புதமாக அமைந்தது.

இன்னும் சற்று அழுத்தம் நிறைந்த காட்சிகளை படத்தில் சேர்ந்திருக்கலாமோ என்று நினைக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத், தியேட்டர் மொமெண்ட் துவங்கி திருவிழா மொமெண்ட் வரை அனி ஆணிவேர். ஐயப்பன் பாட்டு ஆடியன்ஸா இருக்கட்டும், ஐ-ட்யூன் ஆடியன்ஸா இருக்கட்டும் அனிருத் இசைக்கு டான்ஸ போடாம இருப்பாங்களா ? தியேட்டரே ஜாலியோ ஜிம்கானா தான்.

கில்லி, போக்கிரி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களின் காட்சிகளை இன்று வரை கொண்டாடும் நண்பா, நண்பிகளுக்கு மனதில் பதியும்படியான காட்சிகள் பீஸ்ட்டில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் கொண்டு மலையாள வாசத்தை தந்தாலும் அவர்களை இன்னும் அதிக காட்சிகளில் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பல திசைகளில் பிரச்சனை வந்தாலும், அதை சமாளிப்பது தான் ஹீரோவின் தலையாய கடமை. ஆனால் இதில் நாயகன் மிக எளிதாக வில்லன்களை பந்தாடுவது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

தளபதி எனும் ஒரே நட்சத்திர அந்தஸ்தை நம்பி சில காட்சிகளை வைத்துள்ளனர். ஆனால் அது பக்கபலமாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்.

ரசிகர்களை ஜாலியாக வழியனுப்பவே, ஜாலியோ ஜிம்கானா அமைந்தது. கெஸ்ட் என்ட்ரி தந்த நெல்சன் மற்றும் அனி-க்கு ஸ்பெஷல் சல்யூட். தளபதியின் குரலில் பாடல்னா சொல்லவா வேணும். என்ன எனர்ஜி நண்பா.

Verdict

படமாக பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், தளபதியின் ஒன்-மேன் ஷோ இதயத்தை குறிவைக்கும்.

Galatta Rating: (2.5 / 5.0)
Click Here To Rate