12 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், தாய் நாடான உக்ரைன் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தி போரிட்டபோது, ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்துள்ள சம்பவம், உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்றுடன் 22 வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இப்படியாக, ரஷ்யா தொடர்ச்சியாக, உக்ரைனை மிக கடுமையாக தாக்கி வருவதால், ரஷ்ய படைகளின் தாக்குதல்களில் உக்ரைன் நகரங்களின் பல இடங்களிலும் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலிலுக்கு மத்தியில் தான், உக்ரைன் நாட்டின் டாக்டரான 48 வயதான ஓல்கா செமிடியானோவா என்ற பெண், 6 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், 6 குழந்தைகளை தத்தெடுத்த மொத்தம் 12 குழந்தைகளை வளர்த்து வந்தார்.
அதே நேரத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தனது நாட்டின் மீதான பற்றுதல் காரணமாக, அவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தான், 12 குழந்தைகளுக்கு தாயான ஓல்கா செமிடியானோவா, கடந்த 3 ஆம் தேதி அன்று உக்ரைனின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
குறிப்பாக, ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் காரணமாக, ஓல்கா செமிடியானோவா மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், வயிற்றில் தாக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார்.
அத்துடன், ஓல்கா செமிடியானோவா உடன் போரில் ஈடுப்பட்ட சக உக்ரைன் நாட்டு வீரர்களும் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக, ஓல்கா செமிடியானோவா சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இன்னும் பல சடலங்கள் அந்த பகுதியில் மீட்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 12 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், தாய் நாடான உக்ரைன் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தி போரிட்டபோது, ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தது குறித்து அவரது மகள் ஜூலியா பேசும் போது, “அவர் கடைசி வரை வீரர்களைக் காப்பாற்றினார்” என்று, கூறியுள்ளார்.
“இறந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன என்றும், ஆனால் கடுமையான சண்டை காரணமாக இன்னும் என் தாயின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை” என்றும், அந்த சிறுமி கூறியுள்ளார்.
இதனிடையே, உக்ரைன் நாட்டில் 5 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் “சிறந்த தாய்” என்கிற பட்டமானது, 12 குழந்தைகளுக்குத் தாயாகி தாய் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தி வீர மரணம் அடைந்த ஓல்கா செமிடியானோவுக்கும் “சிறந்த தாய்” என்கிற பட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.