“வரும் மே 9 ஆம் தேதிக்குள் உக்ரைன் நாட்டின் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டுமிட்டு உள்ளதாக” உக்ரேன் ராணுவம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.
ரஷியா - உக்ரைன் போர் இன்று 30 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், ரஷ்யா தனது ஒட்டு மொத்த பலத்தை திரட்டி, உக்ரைன் மீது தொடர்ச்சியாக மிக கடுமையாக தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால், “ரஷ்யா செய்வது போர் இல்லை, பயங்கராவதம்” என்று, புடினை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
அத்துடன், “உக்ரைனில் மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை ரஷ்யா வீசி வருவதாக” பீதியை கிளப்பும் புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.
மேலும், “உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியு போல் நகரத்தை நோக்கி இந்த மாதிரியான குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் தரையில் உள்ள புற்களும் கூட பற்றி எரிந்து வருவதாகவும்” தொடர்ச்சியாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி தொடர்ந்து பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக, “உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, உலகையே மிரட்டும் வகையில் அணு ஆயுத எச்சரிக்கையை” கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுத்திருந்தது.
என்றாலும், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை பல்வேறு உலக நாடுகளும் நேற்று வரை விதித்து வருகின்றன.
“இரு நாடுகளுக்குள்ளும் இடையேயான இந்த போர், புதிதாக 3 ஆம் உலகக்போருக்கு வழி வகுக்கும்” என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தான், போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையானது பல கட்டங்களாக நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையிலும், அது முற்றிலுமாக தோல்வியில் முடிவடைந்து உள்ளது.
அதே நேரத்தில், 2 ஆம் உலக போருக்குப் பிறகு ரஷ்யா, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9 ஆம் தேதியை “ஜெர்மனியை போரில் வென்ற நாளாக ரஷ்யாவில் கொண்டாடப்பட்டு வருகிறது”.
இந்த நிலையில் தான், உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், “மே 9 ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா, தங்கள் நாட்டு ராணுவத்திடம் தெரிவித்து உள்ளதாக” உக்ரைன் நாட்டின் ஆயுதப் படைகளின் உளவுத்துறை தரப்பில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இதனால், உக்ரைன் நாட்டில் உள்ள மிச்ச மீது மக்களும் கடும் பீதியடைந்து உள்ளனர். அத்துடன், உக்ரைன் நாடே முழுவதுமாக அழியும் சூழல் உருவாகி உள்ளதாகவும், ஒரு தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில், “உக்ரைன் நாட்டிற்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ அமைப்பு முடிவு செய்து உள்ளதாக” இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
மேலும், “உக்ரைன் தனியாக போராடவில்லை என்றும், நாங்களும் இருக்கிறோம்” என்றும், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வாக்குறுதி அளித்து உள்ளது, ரஷ்யா கோபம் மூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.