கொரோனா காலம் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தடுக கார்ட்போர்டு கட்டில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க வீரர் ஒருவர், போட்டோ எடுத்துப் பகிர்ந்துள்ள சம்பவம், பேசும் பொருளாக மாறி உள்ளது.
8 முறை அமெரிக்க சாம்பியன் வென்ற இளம் வீரர் ஒருவர், சிட்னி ஒலிம்பிக்கின் போது, தினம் 3 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அதாவது, “எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 1988 ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறப்படுகிறது.
ஆனால், தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதற்கு முக்கிய காரணம், “தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், இப்படியாக பாலியல் உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும்” இது போன்ற போட்டி காலங்களில், அதிக அளவில் வீரர்கள் பாலியல் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது.
இதே காரணத்தை வலியுறுத்தித் தான், “கடந்த 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் தொடரில், அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீர் ப்ராக்ஸ் கிரேர் என்ற இளம் வீரர், ஒரு நாளைக்கு 3 பெண்களுடன் பாலியல் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்” என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு சக ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.
அதன் படி, ஈட்டி எறிதல் போட்டியில் மிகச் சிறந்த விளையாட்டு வீரரான ப்ராக்ஸ் கிரேர், அமெரிக்காவில் 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார். இந்த செய்தி, வெளியாகி கடந்த சில நாட்களாக சக விளையாட்டு வீரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் தான், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. அதன் படி, வரும் 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று வரை இந்த போட்டிகள் நிறைவு பெறுகிறது. அத்துடன், இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்று உள்ளனர். இதில், ஒட்டு மொத்தமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
ஆனால், “தற்போது கொரோனா காலம் என்பதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தடுக்க கார்ட்போர்டு கட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக” அமெரிக்க வீரர் ஒருவர் போட்டோ எடுத்து, அதனை பகிர்ந்துள்ளார்.
அதன் படி, அமெரிக்க தடகள வீரர் பால் கெலிமோ தன், தன்னுடைய டிவிட்டரில் தொடர்ச்சியாக அந்த செக்ஸுக்கு எதிரான கார்ட் போர்டு கட்டில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த டிவிட்டை, நியூயார்க் போஸ்ட்டும் அதே செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
இப்படியான இந்த கார்டுபோர்டு கட்டில்கள், ஒருவருக்கு மேல் தாங்காது என்றும், அப்படி எடை கூடினால், அந்த கட்டில் உடைந்து விடும் என்றும், அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதனை, “anti sex கட்டில்” என்றும், அவர் விமர்சித்து உள்ளார்.
ஆனால், இந்த செய்தியை ஒலிம்பி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. “ஒலிம்பிக் கட்டில்கள் மிகவும் வலிமையானவை” என்றும் கூறியுள்ளன.
இதற்கு ஆதராமாக, “அயர்லாந்து ஜிம்னாஸ்டிக் வீரர் ரைஸ் மெக்லினாகன், அந்த கட்டிலில் ஏறி எம்பிக் குதித்து கட்டில் வலிமையாக உள்ளது” என்கிற வீடியோவைவும் வெளியிட்டு இருக்கிறது.
இதன் மூலமாக, கார்ட்போர்டு கட்டில் ஒரு போலி செய்தி என்றும், ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அதே போல், கட்டில்களை ஒலிம்பிக்கிற்காக உருவாக்கிய ஏர் வீவ் நிறுவனம், “இந்த கட்டில்கள் 200 கிலோ எடையைத் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக” ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
தற்போது, இந்த புதிய சர்ச்சையின் காரணமாக, “2 பேரைத் தாங்கும் தன்மை கொண்டதே என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு” அந்த நிறுவனமும் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும், “தற்போது 1,60,000 ஆணுறைகளையும் அந்நிறுவனம் வினியோகித்து உள்ளது என்றும், ஆனால் இது ஒலிம்பிக் கிராமத்தில் பயன்படுத்த அல்ல” என்றும், அதன் அமைப்பாளர்கள் எச்சரிக்கையும் செய்துள்ளனர். காரணம், “இதுவும் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகக் கொடுக்கப்பட்டதாக” விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.