கிறிஸ்துமஸை தனியாக கொண்டாட விருப்பமில்லாத முதியவர் ஒருவரின் ராட்சத விளம்பரப் பலகை அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸை தனியாக கொண்டாட விரும்பாத 66 வயது முதியவர் 50-55 வயதில் பெண் வேண்டி வைத்துள்ள பெரிய விளம்பரப் பலகை அனைவரையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கான்ட்ராக்டரும் உடற்பயிற்சி ஆர்வலருமான ஜிம் பேஸ் உலகின் மிகவும் சுதந்திரமான இடத்திற்கு குடிபெயர நினைத்தார். அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெக்சாசுக்கு குடிபெயர்ந்தார். ஜிம் பேஸ் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் ஆவார்.
மேலும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் ஜூன் மாதம் தனது தொழிலை லோன் ஸ்டார் ஸ்டேட்டிற்கு மாற்றினார். இந்த சூழலில் தனிமை அவரை வாட்டியது. இதனால் தனது மீதமுள்ள நாட்களைக் கழிக்க ஒரு பெண்ணை தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸை தனியாக கொண்டாட விருப்பமில்லாத அவர் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் நல்ல பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராட்சத விளம்பரப் பலகையை அமைத்தார். அந்த விளம்பரப் பலகையில் நல்ல பெண் தேவை என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் 50-55 வயதுடைய பெண் பேசுவதற்கு மற்றும் பரஸ்பர அன்பான செயல்களுக்கு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரப் பலகையில் அவரது தொலைபேசி எண் கீழே அச்சிடப்பட்டிருந்தது. விளம்பரப் பலகை
வைக்கப்பட்டதிலிருந்து ஜிம் பேஸ்-க்கு நான்கைந்து நாட்களாக பலர் குரல் வழியாக குருஞ்செய்தி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.