மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாவின் விவாகரத்து முடிவு தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்காரர் 65 வயதான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனராக தற்போது வரை இருந்து வருகிறார். இவரது மனைவி 56 வயதான மெலிண்டா கேட்ஸ், அவருடன் வாழ்ந்து வந்தார்.
இந்த தம்பதிக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், “ரோரி ஜான் கேட்ஸ், ஜெனிபர் கேதரின் கேட்ஸ், போப் அடில் கேட்ஸ்” என மொத்தம் 3 வாரிசுகள் உள்ளனர்.
இந்த ஆண்டு நிலவரப்படி பில்கேட்ஸ் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக இருக்கிறது. இதனால், உலக பணக்காரர்களின் வரிசையில் தற்போது அவர் 4 ஆம் இடத்திலும் இருந்து வருகிறார்.
இப்படியான நிலையில் தான், உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், தன்னுடைய 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். ஆம், பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியரின் தற்போது பிரிந்து விட்டனர். இது பற்றி, கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியானது.
அதாவது, “பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், மிக நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது மண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக” அமெரிக்க ஊடகங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது.
“பில்கேட்ஸ் உடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 66 வயதான ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில்” ஈடுபட்டு வந்தவர் ஆவர்.
அத்துடன், “இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் சிறை தண்டனையும் பெற்றிருக்கிறார். அதுவும், சிறுமியரை வைத்து மிகப் பெரிய பாலியல், நெட்வொர்க் ஒன்றையும் நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது, மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் மீது, மீண்டும் ஒரு பாலியல் சர்ச்சை எழுந்திருக்கிறது.
அதாவது, “மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், பில்கேட்ஸ் திருமணத்தைத் தாண்டிய கள்ளக் காதல் உறவில் இருந்தார்” என்பது தான் அந்த குற்றச்சாட்டு.
இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர், தங்களது விவாகரத்தை முறைப்படி அறிவித்தனர். இதனால், அவர்களது 27 ஆண்டுக்கால திருமண உறவு முடிவுக்கு வந்தது.
தற்போது, பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதிகளின் இந்த விவாகரத்துக்கான மனுவை, வாஷிங்கடன் நகரில் உள்ள கிங் கவுன்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் மெலிண்டா கேட்ஸ் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், அப்போது அங்கு வந்த செய்தியாளர்களை சந்திப்பதையும் அவர் தவிர்த்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து, பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியினரின் விவாகரத்து, தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.