ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க டாடா குழுமம் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்பித்து உள்ளது. ஏற்கனவே மலேசிய நிறுவனமான ஏர் ஏசியாவின் பெரும்பான்மையான பங்குகளை டாடா குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக டாடா குழுமத்துக்கு செல்ல இருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காவிட்டால் அதை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று கடந்த ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 200 ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிறுவனத்தை வாங்க முடிவு செய்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த அஜய் சிங்கும் ஆர்வ காட்டிவருகிறார். 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. விமான துறையில் ஈடுபட டாடா நிறுவனம் ஆர்வம் காட்டியது.
அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. 2018ல் ஏர் இந்தியா நிறுவன பங்கு விலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அதை வாங்க மிகக் குறைவான நிறுவனங்களே ஆர்வம் காட்டின. ஆனால் இந்த முறை அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.