“பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் என் மனைவியின் தாயை 2 வது திருமணம் செய்த மனைவியின் சிற்றப்பாவைத் தண்டியுங்கள்” என்று, ரோஹித்த ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்சே, தனது டிவிட்டர் பதிவில் பரபரப்பு கருத்தை ஒன்றைத் தெரிவித்து உள்ளார்.
அதாவது, தனது டிவிட்டர் பதிவில் “என்.வீ. திவாகரன் என்பவர், எனது மனைவியின் சித்தப்பா என்றும், வராது மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளதாகவும்” ரோஹித்த ராஜபக்சே பதிவிட்டு உள்ளார்.
மேலும், “எனது மனைவி டட்யானா வின் தாயை, இந்த திவாகரன் 2 வது திருமணம் செய்து கொண்ட போதிலும், என் மனைவி டட்யானா வின் தந்தை இவர் அல்ல” என்றும், ரோஹித்த ராஜபக்சே கூறி உள்ளார்.
“இதனால், அவருடன் எனக்குப் பெரிய அளவில் எந்த வித தொடர்பும், பேச்சு வார்த்தையும் கி8டயாது” என்பதையும், ரோஹித்த ராஜபக்சே உறுதிப்படுத்தி உள்ளார்.
“கடந்த சில ஆண்டுகளாகவே என்.வீ. திவாகரன் உடன் முழுமையான எந்த விதமான தொடர்பும் நான் வைத்துக் கொள்ளவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
குறிப்பாக, “பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த என்.வி. திவாகரன், அங்கிருந்த பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது என்றும், இதனால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தகுதி தராதாரம் பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், ரோஹித்த ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.
மேலும், “இப்படியான பாலியல் குற்றச்சாட்டில் சிக்குபவர்களின் சமூக அந்தஸ்து உள்ளிட்ட எதையும் பார்க்காமல், சம்மந்தப்பட்டவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், ரோஹித்த ராஜபக்சே தன்னுடைய டிவிட்டரில் கூறியுள்ளார். இது, அந்நாட்டில் பெரும் வைரலாகி வருகிறது.
இதனிடையே, “பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய என் மனைவியின் தாயை 2 வது திருமணம் செய்த என் மனைவியின் சிற்றப்பாவைத் தண்டியுங்கள்” என்று, ரோஹித்த ராஜபக்சே கருத்து கூறி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவானது, அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்த நிகழ்வு பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
அதே போல், இலங்கையில் காதலர் தினம் கொண்டாட அந்நாட்டுக் காவல் துறை அதிரடியாகத் தடை விதித்து உள்ளது. வரும் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றன. அன்றைய தினம், இலங்கையில் காதலர் தினம் கொண்டாடப்பட இலங்கை அரசு, தற்போது அதிரடியாகத் தடை விதித்து உள்ளது.
மேலும், வரும் 14 ஆம் தேதி விதிமுறைகளை மீறி கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்பவர்களும், அதில் பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்றும், அந்நாட்டுக் காவல் துறை மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் காவல் துறை ஊடகப் பிரிபு அதிகாரி அஜித் ரோகன, “சுகாதாரத் துறையின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்” என்று, அறிவுறுத்தி உள்ளார்.
“அதனை மீறுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.