முதல் முறையாக பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 ஆண் 3 பெண் குழந்தைகள் என்று மொத்தம் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.
இலங்கையில் தான் இப்படியான ஒரு ஆச்சரிய நிகழ்வு நடந்திருக்கிறது.
அதிசயமான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் உலகின் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், சில அதிசயங்கள் நம்மை முற்றிலுமாக மெய்சிலிர்க்க வைத்து விடுவதுண்டு.
அதுவும், ஒரு பிரசவத்தில் 2 குழுந்தைகள், 3 குழந்தைகள் பிறந்து பார்த்திருப்போம் அல்லது நாம் அதுப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு ஏன், நான்கு குழந்தைகள் கூட சமீபத்தில் பிறந்ததாகச் செய்திகளும் வெளியானது.
ஆனால், ஒரே பிரசவத்தில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் 3 பெண் குழந்தைகள் என்று மொத்தம் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளது இலங்கையில் தற்போது அரங்கேறி இருக்கிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள நைன்வெல்ஸ் Ninewells என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம், அங்குள்ள பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அப்போது, அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்ற இந்த பிரசவத்தில் வெறும் 2 நிமிட இடைவெளியில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன.
இப்படி, “ஒரே பிரசவத்தில் பிறந்துள்ள இந்த குழந்தைகளின் எடையானது 1.6 கிலோ கிராம் கொண்டது என்றும், எடை குறைந்த குழந்தை 870 கிராமுடனும் உள்ளதாகவும்” மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து “தாயும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக” மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முக்கியமாக, இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 6 குழந்தைகள் பெற்றெடுத்து உள்ளது இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.