“ஒரு பெண்ணை 17 நிமிடங்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை 7 காணொளிகளாக எடுத்தவனுக்குத் தண்டனை இல்லை” என்று, நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கான காரணங்களையும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூர் நீதிமன்றம் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை அளித்து, அதற்கு மிகவும் சாதாரணமான ஒரு காரணத்தை விளக்கமாகவும் அளித்திருக்கிறது.
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், அவரது 20 வயது கொண்ட இளைஞர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்.
இந்த 20 வயது இளைஞன் யாரென்றால், சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஹரி கிஷன் பாலகிருஷ்ணன் என்பவர் ஆவர்.
அதில், அந்த இளம் பெண் மிகுந்த போதையான நிலையில், தன்னுடைய நிதானத்தை முற்றிலுமாக இழந்து தடுமாறியிருக்கிறார். ஆனால், கூடவே மது அந்திய அந்த 21 வயது இளைஞன் மட்டும் சற்று நிதானமாக இருந்து, கடும் போதையில் தள்ளாடிய அந்த இளம் பெண்ணின் ஆடைகளைக் களைத்து நிர்வாணப்படுத்தி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
குறிப்பாக, தனது தோழியை பாலியல் பலாத்காரம் செய்ததை, அவர் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்திருக்கிறார்.
இப்படியாக, அந்த இளம் பெண்ணை மொத்தமாக 17 நிமிடங்கள் பாலியல் பலாத்காரம் செய்த அந்த வெறிபிடித்த இளைஞன், அந்த பெண் தொடர்பான பலாத்கார காட்சிகளை 7 வீடியோக்களாக எடுத்திருக்கிறான்.
பின்னர், அந்த இளம் பெண்ணுக்குப் போதை தெளிந்த பிறகு, தன்னுடைய தோழன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனை அவன் வீடியோவாக எடுத்ததும் தெரிய வந்தது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் தனது தன்னை பலாத்காரம் செய்த ஆண் நண்பன் குறித்து புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், “இந்த பலாத்கார சம்பவத்தின் போது, நான் அரை மயக்கத்தில் இருந்ததால், தன்னால் உடனே எழுந்திருக்க முடியவில்லை என்றும், எனது நண்பனின் பலாத்கார செயல்களைத் தடுக்கவும் முடியவில்லை” என்றும், அவர் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், “என்னால் இந்த பலாத்கார சம்பவத்தைத் தடுக்க முடியாவிட்டாலும், என்ன நடக்கிறது? என்பது மட்டும் எனக்கு ஓரளவுக்குத் தெரிந்தது” என்றும், குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், போலீசார் சம்மந்தப்பட்ட இளைஞனை கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் விசாரணைக்கு ஹரி கிஷன் பாலகிருஷ்ணனை கைது செய்து அழைத்துச் சென்றபோது, தனது செல்போனில் இருந்த வீடியோக்களை அவசர அவசரமாக அந்த இளைஞன் அழித்திருக்கிறார்.
எனினும், போலீசார் அந்த வீடியோக்களை தடயவியல் விசாரணையின் போது, மீண்டும் திரும்பவும் கொண்டு வந்தனர்.
பின்னர், இந்த வீடியோக்கள் மற்றும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஆதாரங்களை போலீசார், அந்நாட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் தற்போது இந்த குற்றவாளிக்கு வெறும் 6 மாதங்கள் மட்டுமே சீர்திருத்தப் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அத்துடன், “17 நிமிடங்கள் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 7 வீடியோக்கள் எடுத்த இளைஞனுக்குத் தண்டனை இல்லை” என்பதற்கு, அந்த நீதிமன்றம் காரணமும் கூறியிருக்கிறது.
அதாவது, “21 வயதுக்குக் குறைவான குற்றவாளிகளுக்கு இப்படி சீர்திருத்தப் பயிற்சிகளைச் சிங்கப்பூர் அரசு தண்டனையாக அளித்து வருகிறது.
அதிக பட்ச குற்றத்தை அந்த இளைஞர் செய்திருந்தாலும், 21 வயதுக்குக் கீழே இருப்பதால், 6 மாத சீர்திருத்தப் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
ஆனால், இதே இளைஞன் 21 வயதுக்கு மேல் இருந்தால், பாலியல் பலாத்கார வழக்கில் அந்த இளைஞனுக்குக் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் தண்டனையும், பிரம்பு அடியும் வழங்கப்பட்டிருக்கும் என்றும், அதிக பட்சமாக 20 ஆண்டுகள் வரை தண்டனையும், பிரம்படியும் வழங்கப்பட்டிருக்கும்” என்றும், நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், “இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த குற்றத்திற்காக, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக நீதிமன்றம் விதிக்கப்பட்டிருக்கும் என்றும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் ஹரி கிஷன் பாலகிருஷ்ணன் 21 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், வெறும் 6 மாத சீர்திருத்தப் பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக” நீதிமன்றம் விளக்கம் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.