“ரஷ்ய அதிபர் புடின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்” என்று, அதிர்ச்சி கிளப்பும் செய்திகள் வெளியாகி உலக அளவில் பெரும் வைரலாகி வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் 3 மாதம் முழுவதுமாக முடிந்து, 4 வது மாதமாக நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், “ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து புதின் உயிர் தப்பி உள்ளதாகவும்” கடந்த வாரம் தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது, “புற்று நோய் தீவிரம் காரணமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்” என்று, மருத்துவர்கள் கெடு விதித்து உள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ரஷ்யா ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இந்த போர் முடிவுக்கு வராமல் 4 வது மாதமாக தொடர்ந்து வருகிறது.

அதாவது, உக்ரைன் போரில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகைளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்ய போர் வீரர்கள் பலரும், உக்கிரமான பல்வேறு விதங்களில் கடும் கொடூரங்களை நிகழ்த்தி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வண்ணம் ஒரு பக்கம் உள்ளன.

இந்த நிலையில் தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல் நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால், இந்த தகவலை தற்போது வரை ரஷ்ய அரசு தரப்பினர் உறுதி செய்யவில்லை என்றும் மற்றொரு தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

அதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து இண்டிபெண்டன்ட் இதழில் ரஷ்ய உளவாளி அளித்த தகவல் வெளியாகி இருக்கின்றன.

அதில், “ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு, அது வேகமாக அதிகரித்து வருவதாக” கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், “ரஷ்ய மருத்துவர்கள் புடின் இன்னும் 3 ஆண்டுகள் வரையில் மட்டுமே உயிர் வாழ்வார் என்று கணித்துள்ளதாகவும்” அந்த உளவாளி கூறியிருப்பதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறும்போது, “இது போன்ற எந்த ஒரு நோய் தொற்றும் அதிபர் புடினுக்கு இல்லை” என்று, உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

என்றாலும், “புற்றுநோய் தீவிரம் காரணமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று, மருத்துவர்கள் கெடு விதித்துள்ளதாக” ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ள செய்தியானது, தற்போது உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.