ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 100 வது நாளை எட்டி உள்ள நிலையில், கிட்டதட்ட 20 சதவீத பகுதிகள் ரஷ்யா வசம் சென்று உள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் 3 மாதம் முழுவதுமாக முடிந்து, 4 வது மாதமாக நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த போர் இன்றுடன் 100 வது நாளை எட்டி உள்ளது.
உக்ரைன் நாட்டிற்கு எதிராக ரஷ்யா ராணுவம் தொடர்ந்து போர் புரிந்து வரும் நிலையில், துளியும் சளைக்காமல் உக்ரைனும் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இந்த போர் முடிவுக்கு வராமல் 4 வது மாதமாக தொடர்வதுடன், இன்றுடன் 100 வது நாளாகவும் தொடர்ந்து வருவது, உலகையே உன்னிப்பா கவனிக்க வைத்து உள்ளது.
அதாவது, உக்ரைன் போரில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகைளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்ய போர் வீரர்கள் பலரும், உக்கிரமான பல்வேறு விதங்களில் கடும் கொடூரங்களை நிகழ்த்தி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வண்ணம் உள்ளன.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் கூட, “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல் நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளி வந்த நிலையில், “ரஷ்ய அதிபர் புடின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்” என்று, அதிர்ச்சி கிளப்பும் செய்திகளும் கடந்த வாரம் வெளியாகி உலக அளவில் பெரும் வைரலானது.
அத்துடன், “ரஷ்யா - உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள்” என்று, ஐ.நா. பெரும் கவலை தெரிவித்திருக்கும் நிலையில்,
“உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் ரஷ்ய படைகள், கைப்பற்றி உள்ளன.
அதாவது, நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுக்கத் தொடங்கியது.
அதன்படி, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்க்கிவ் போன்ற சில நகரங்களின் பெரும் பகுதியை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளன.
மேலும், உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை முழுமையாக ரஷ்ய படைகள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றன.
அந்த வகையில், ரஷ்ய ராணுவத்தினர் சுமார் 15,000 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், உக்ரைன் கூறி வருகிறது.
குறிப்பாக, “உக்ரைன் நாட்டின் பொது மக்கள் உட்பட பல ஆயிரம் பேரை ரஷ்ய ராணுவம் கொன்று குவித்துள்ளதாகவும்” உக்ரைன் பகிரங்கமான குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக, உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரில் சில வாரங்களுக்கு முன்பு சடலங்கள் குவியல் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது, அங்குள்ள கிழக்கு டோன்பாஸ் நகரில் சில பகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் மிக மிக தீவிரம் காட்டி வருகின்றன.
இத்தகைய தாக்குதலானது தற்போது 100 நாட்களை கடந்து உள்ள நிலையில், “எங்கள் நாட்டின் 20 சதவீத பகுதிகள் ரஷ்யாவின் வசம் சென்று விட்டதாக” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
“ரஷ்ய ராணுவத்தின் மீது எதிர்த்தாக்குதல் நடத்த சிறை கைதிகளையும் உக்ரைன் களம் இறங்கி உள்ளது என்றும், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய கபளீகரம் செய்து உள்ளதாகவும்” இங்கிலாந்து ராணுவம் கூறியிருக்கிறது.
என்றாலும், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு ராணுவங்களை அனுப்பி வருவதால், இப்போதைக்கு இந்த சண்டை ஓயாமல் தொடரும் என்றே தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.