“சீனாவில் போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த 132 பேரில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை” என்கிற தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.
சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங் சோ வுக்கு 132 பேருடன் சென்ற விமானம் ஒன்று, அந்நாட்டில் ஒரு பயங்கர விபத்தில் நேற்று மாலை சிக்கிக்கொண்டது.
அதாவது, சீனா நாட்டில் உள்ள குன்மிங் பகுதியில் இருந்து குவாங் சோ நோக்கி சென்ற பயணிகள் விமானம், அந்நாட்டில் உள்ள ஒரு மலை பகுதியில் எதிர்பாரத விதமாக கீழே விழுந்து பெரும் விபத்தில் சிக்கி உள்ளது. அதுவும், கிட்டதட்ட 8,400 அடி உயரத்தில் பறந்து சென்றுக்கொண்டிருந்த இந்த விமானம், 183 அடி உயர்த்தில் இருந்து அங்குள்ள மலை பகுதியில் கீழே விழுந்து நொருங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியானது.
குறிப்பிட்ட இந்த மலை பகுதியில் விழுந்து நொறுங்கிய அந்த விமானத்தில் “மொத்தம் 132 பேர் பயணித்து உள்ளனர் என்றும், ஆனால் இந்த 132 பயணிகளின் நிலை என்னவாயிற்று?” என்பது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, மலைப் பகுதியில் விமானம் விழுந்த நொருங்கிய இடத்தை சுற்றியிலும், தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது என்றும், அந்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த கட்ட தகவல்கள் வெளியானது.
முக்கியமாக, மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளதாகவும். அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
அத்துடன், விமான விபத்து நடைபெற்ற மலைப் பகுதிக்கு மீட்பு படையினர், தீயணைப்பு வீரகள், மலையேற்ற குழுவினர் என்று, பல்வேறு மீட்பு குழுவினரும் அடுத்த சில மணி நேரத்தில் அங்கு விரைந்து சென்ற நிலையில், அவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ந்த விமானம் புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களில் அந்த விமானத்தில் இருந்து மொத்த தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அப்போது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், “சீனாவில் போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதில் பயணம் செய்த 132 பயணிகளும் தற்போது உயிரிழந்து உள்ளதாக” அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, விபத்தில் சிக்கிய அந்த விமானத்தில் “123 பயணிகள், 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணித்து உள்ளனர். இந்த விமானம் மலையில் விழுந்து விபத்தில், 132 பயணிகளும் உயிரிழந்து உள்ளனர் என்றும், அங்கிருந்து ஒருவர் கூட உயிருடன் இருப்பதாக தெரியவில்லை” என்கிற தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இது தொடர்பாக இன்னும் அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படத நிலையில், “விமான விபத்து தொடர்பாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால் தற்போது வரை விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படாததால், இந்த விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாகவே கருதப்படுவதாகவும்” கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.