சீனாவின் பெய்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் தாக்கம் இன்னும் முற்றுப்பெறாத நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் மிரட்ட தொடங்கியுள்ளது.


இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது சீனாவில் கண்டறியப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஒரே நாளில் புதிதாக 25 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 87 ஆயிரத்து 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு, பிரிட்டனில் இருந்து திரும்பிய ஷன்ஹாய் நகரைச் சேர்ந்த மாணவிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியின் தொடர்ப்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருக்கா என்ற சோதனை பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது சீனா அரசு.