புதிதாக உருமாறியிருக்கும் ஓமிக்ரான், டெல்மிக்ரானை வைரசைத் தொடர்ந்து, ஃப்ளோரொனா என்னும் புதிய வகை வைரஸ் தொற்று இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகள் தான் மக்களை தாக்கிச் சென்றிருக்கின்றன என்றாலும், உலகின் மற்ற நாடுகளில் 3 வது அலையும், இன்னும் சில நாடுகளில் 4 வது அலையும் கடந்து சென்றிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
இந்த சூழலில் தான், கடந்த 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்னும் வகையான வைரஸ் தொற்று, மீண்டும் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டு இருக்கிறது.
ஒமிக்ரான் என்னும் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ், மின்னல் வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளிலும் தினசரி கொரோனா பாதிப்பு படுவேகமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் லட்சக்கணக்கில் வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
அதே நேரத்தில், ஒமிக்ரான் என்னும் வைரஸ் தொற்று, மிகப் பெரிய அளவில் தீவிரமான பாதிப்பை பொது மக்களிடம் ஏற்படுத்துவதில்லை என்றாலும் கூட, அதிகப்படியான பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்டும் போது, அது சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
இந்த நிலையில் தான், புதிதாக உருமாறியிருக்கும் ஓமிக்ரான், டெல்மிக்ரானை வைரசைத் தொடர்ந்து, “ப்ளோரொனா” என்னும் புதிய வகை வைரஸ் தொற்று தற்போது, இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, “இன்புளுயன்சா” எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த “ஃப்ளோரொனா” என்னும் புதிய வைரஸ் தொற்று இஸ்ரேலில் தற்போது முதன் முறையாக கண்டறியப்பட்டு உள்ளது.
டெல் அவிவ் நகரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவனையில், பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
குறிப்பாக, இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3 வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக உள்ளனர்.
இதனால், அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு உள்ளனர். என்றாலும், அந்நாட்டில் இந்த மாதிரியான புதுவிதமான தொற்றுகள் அங்கேயே ஏற்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு கண்டறியப்பட்டுள்ள “ஃப்ளோரொனா” என்னும் புதிய வைரஸ் தொற்று குறித்து, தற்போது மருத்துவ உலகமே தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, சீனாவில் உருவமாறிய கொரோனா, தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஒமிக்ரான் வைரசாக உருமாறி உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இஸ்ரேலில் நாட்டில் முதன் முறையாக “ஃப்ளோரொனா” என்னும் புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கி இருப்பது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.