அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் பதிவியேற்க உள்ளது உறுதியானது.

அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.

ஜோ பைடன் ஒப்புதலுக்கு பின் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே 50-50 என சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாக்சனை நீதிபதியாக நியமிக்க தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து பைடன் தனது தேர்தல் வாக்குறுதியின் போது கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை நீதிபதியாக நியமிக்கலாம் என்று கூறியதை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். 94 சதவீதம் வெள்ளை அமெரிக்கர்களுக்கு மத்தியில், 6 சதவீதம் மட்டுமே இருக்கும் கறுப்பின ஆப்ரிக்கரை நீதிபதியாக நியமிப்பதா என்று அவர்கள் விமர்சித்தனர்.

அதன் பின்பு நடந்து முடிந்த செனட் வாக்கெடுப்பில் 53 - 47 என்ற வித்தியாசத்தில் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் 53 வாக்குகள் பெற்றதையடுத்து ஜாக்சன், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக நியமிக்கப்படபோவது உறுதியாகியுள்ளது. இறுதி வாக்கெடுப்பு முடிந்த பிறகு, செனட் அறையில் பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்கப்பட்டது

இந்நிலையில் தற்போது 51 வயதாகும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், ஓய்வு பெறப்போகும் 83 வயது நீதிபதி ஸ்டீபன் பிரேயர் என்பவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார். ஜாக்சன் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்ற உள்ள மூன்றாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார். ஆனால் முதல் கறுப்பினப் பெண். பள்ளிப்படிப்பை முடித்த கேடான்ஜி பிரவுன், ஹார்வர்ட் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்டமும் படித்து முடித்தார்.

மேலும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுப் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒரே நீதிபதி கேடான்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. அதற்கு காரணம் இருவரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். அதள் விளைவாக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக பரிந்துரைத்தார்.

இதையடுத்து 2010-ம் ஆண்டு பிரவுன் ஜாக்சன் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர், சமீபத்தில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. கறுப்பினத்தவர்களில் முதன்முறையாக துர்குட் மார்ஷல் என்பவர் 1967 முதல் 1991 வரை அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். அவரை தொடர்ந்து கிளேரன்ஸ் தாமஸ் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.