சவுதி அரேபியாவில் பாத்ரூமில் வைத்து சமோசா தயாரித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மக்களில் பொதுவாக பெரும்பாலானோர் ஓட்டல்களில் சாப்பிடுவதை அறவே தவிர்த்து வருகின்றனர். என்னதான் பசியில் இருந்தாலும் அவர்கள் ஓட்டலில் சாப்பிடவே மாட்டார்கள். அதிகபட்சமாக அவர்கள் டீ மட்டும் குடிப்பது உண்டு. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , ஹோட்டலில் சுத்தம், சமையலில் சுத்தம் இருக்காது என்று தவிர்ப்பது வழக்கம்.

தற்போது உள்ள சூழலில் அனைவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளதால் வீட்டில் சமைப்பதற்கு அதிக நேரம் செலவிட முடிவதில்லை என்பதால் அனைவரும் ஹோட்டலில் ஆர்டர் செய்தோ அல்லது அங்கு சென்று பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்து உண்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் எல்லா ஹோட்டல்களிலும் அப்படி இல்லை. சுகாதாரமான முறையில் சமைக்கும் ஓட்டல்கள் இருக்கின்றன. ஆனால் இதுவரைக்கும் ஓட்டல்களில் சாப்பிடாதவர்கள் இதைக் கேள்விப்பட்டால் இன்னும் கடைசிவரைக்கும் சாப்பிட மாட்டார்கள் என்பது போல் சில ஓட்டல்கள் உள்ளன . அப்படித்தான் ஒரு ஓட்டல் கண்டறியப்பட்டு மூடப்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அந்த ஓட்டல் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . இதில் ஒரு கொடுமை என்னவென்றால் 30 ஆண்டுகளாக அந்த ஓட்டலில் குளியலறையில்தான் சமோசா உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளும் டிபன், மதிய உணவு உள்ளிட்ட சாப்பாடு வகைகளும் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

அதனைத்தொடர்ந்து இது அதிகாரிகளுக்கு புகாராக செல்ல சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சமோசா உள்ளிட்ட சமைக்கப்பட்ட உணவுகள் அந்த குளியலறையில் இருந்ததோடு அல்லாமல் சமைப்பதற்கு தேவையான உணவுப் பொருட்களும் அந்த குளியல் அறையிலேயே இருந்துள்ளது.

மேலும் மாமிச இறைச்சிகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களும் அங்கு இருந்திருக்கின்றன. பூச்சி, எலிகளும் அங்கு அதிகம் இருந்திருக்கின்றன. இதனைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்பு இதையடுத்து அந்த உணவகத்தை பூட்டியுள்ளனர் அதிகாரிகள். மேலும் இவை கடந்த மாதம் ஒரு ஓட்டலில் எலி ஒன்று சுற்றி திரிந்தது. அதை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அதிகாரிகள் கவனத்திற்கு புகாராக செல்ல அந்த ஓட்டல் மூடப்பட்டிருக்கிறது.